வீடியோ ; CSK அணியின் மானத்தை காப்பாற்றிய…!! Kedar Jadhav -ஆ போய் நம்ம தப்ப நினைச்சிட்டோம்…!
அறிமுகம்;
கெதர் ஜாதவ், 2007 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அணியில் விளையாட ஆரம்பித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெதர் ஜாதவ், 2010ஆம் ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும், 2011 ஆம் ஆண்டு கொச்சி டஸ்கிர்ஸ் அணியிலும், 2013 முதல் 2015ஆம் ஆண்டு மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விளையாடினார்.
பின்பு 2016-2017ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும், அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றார். இவர் இந்திய அணியில் 2014ஆம் ஆண்டு இலங்ககைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்.
கெதர் ஜாதவ் செய்த செயலால் சென்னை மானம் காப்பாற்றப்பட்டது ;
2018ஆம் ஆண்டு ஐபிஎல் 2018 தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதில் தான் முதல் முதலில் கெதர் ஜாதவ், சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார்.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்த நிலையில் 165 ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதி ஓவர் வரை போராடி 169 ரன்களை எடுத்து வெற்றியை கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதில் வாட்சன் 16 ரன்கள், அம்பதி ராயுடு 22 ரன்கள், சுரேஷ் ரெய்னா 4 ரன்கள், கெதர் ஜாதவ் 24 ரன்கள், டொஹ்னி 5 ரன்கள், பிராவோ 68 ரன்களை விளாசியுள்ளனர்.
கெதர் ஜாதவ் செய்த சாதனை ;
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்த போது 4வது இடத்தில பேட்டிங் செய்த கெதர் ஜாதவ், அவருக்கு போட்டியின் போது அடிபட்ட காரணத்தால் அவர் மைதானத்தில் இருந்து பெவிலியன் சென்றுவிட்டார். அதன்பின்னர் பட்டிமகி செய்த தோனி, ஜடேஜா , பிராவோ போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதிவரை போராடிய பிராவோ 30 பந்தில் 64 ரன்களை விளாசியுள்ளார். பின்னர் 9 விக்கெட் இழந்த காரணத்தால் வேறு வழி இல்லாமல், அடிப்பட்ட கெதர் ஜாதவ் மீண்டும் பேட்டிங் செய்தார், இறுதி ஒவேரில் 7 ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது.
அப்பொழுது பவுலர் இம்ரான் தாஹிர் மற்றும் அடிப்பட்ட கெதர் ஜாதவ் ஆகிய இருவரும் பேட்டிங் செய்தனர். அப்பொழுது கெதர் ஜாதவ் அடித்த ஒரு சிக்ஸர் ஆட்டத்தை திருப்பிவிட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
என்னதான் கஷ்டப்பட்டு ரன்களை பிராவோ எடுத்தாலும், இறுதி ஓவரில் சரியான நேரத்தில் ரன்களை அடித்து கொடுத்துள்ளார் கெதர் ஜாதவ், அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் வீடியோ :
ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான தோல்வியால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது. அதற்கு முக்கியமான காரணம் கெதர் ஜாதவ் தான் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி பல வாய்ப்புகளை கைப்பற்றிய கெதர் ஜாதவ் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்ததால், 2021 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனது குறிப்பிடத்தக்கது.