இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் சிரிப்பு தான் வரும் ; ஆனால் நான் இதை மட்டும் தான் ரோஹித் ஷர்மாவிடம் கூறினேன் ; சூர்யகுமார் யாதவ் பேட்டி ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷ் அணியும் விளையாட உள்ளனர். இதை வெற்றி பெரும் அணிகள் தான் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கும். ஆனால் இந்த முறை இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்தும், நேற்று நடந்த போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் மோதின. அந்த இரு போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றிய இந்திய அணி குரூப் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தில் உள்ளனர். ஆனால் நேற்று நடந்த போட்டியில் இந்திய மற்றும் ஹாங் காங் அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற காங் ஹாங் அணி பவுலிங் செய்தனர். முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 192 ரன்களை அடித்தனர். பின்பு 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹாங் காங் அணி. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது.

இறுதி வரை போராடிய ஹாங் காங் அணி 152 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய. அதில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட்கோலி ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டம் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.

அதிலும் சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் 68 ரன்களை அடித்துள்ளார். அதனால் சூரியகுமார் யாதவின் ஆட்டம் தான் பேசும்பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி போட்டி முடிந்த பிறகு சூர்யகுமார் யாதவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

கேள்வி : ரோஹித் சர்மா சொன்னார் இந்த ஆசிய கோப்பை முழுவதும் உபயோகித்து வருவதாக சொன்னார். அதனால் நீங்க (சூர்யகுமார் யாதவ்) ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாட வாய்ப்பு இருக்க ? அதனையும் சோதிக்க போகுறீர்களா ?

சூர்யகுமார் யாதவ் பதில் : “அதனால் கே.எல்.ராகுல் அணியில் இருந்து வெளியேற்ற படுவாரா என்று கேக்குறீர்களா ? அவர் (கே.எல்.ராகுல்) இப்பொழுது தான் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அதனால் அவருக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. ஆனால் நான் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய தயாராக தான் இருக்கிறேன்.”

“நான் ரோஹித் சர்மாவிடம் ஒன்று மட்டும் தான் சொன்னேன், நான் (சூர்யகுமார் யாதவ்) எந்த இடத்தில் வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய தயாராக தான் இருக்கிறேன். ஆனால் ப்ளேயிங் 11ல் என்னை மறக்காமல் எடுத்துவிடுங்கள் என்று. நாங்க இன்னும் பல விஷயங்களை செய்ய ஆசைப்படுகிறோம்.”

“புதிய விஷயங்கள் பல இனிவரும் போட்டிகளில் செய்ய போகிறோம். அப்பொழுது தான் பயிற்சி ஆட்டத்தை விட இது போன்ற போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here