இவரை வைத்துக்கொண்டு ஏன் ? பயப்பட வேண்டும் ; அடுத்த போட்டியில் நடக்கும் ஒரே ஒரு மாற்றம் ; வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருக்கும் ;

0

நியூஸிலாந்து : கடந்த 18ஆம் தேதி தொடங்கிய தொடரில் நியூஸிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று டி-20 போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர்.

டி-20 போட்டிக்கான தொடர் :

இரு தினங்களுக்கு முன்பு தான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் மழை பெய்த காரணத்தால் போட்டிகள் முடிவுகள் இல்லாமல் போனது. ஆனால் இரண்டாவது போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வென்ற இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளனர்.

ஒருநாள் போட்டிக்கான தொடர் :

முன்னணி வீரர்கள் யாரும் இல்லாதபட்சத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 306 ரன்களை அடித்தனர்.

பின்பு 307 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி. தொடக்கத்தில் சற்று சோர்வாக போட்டி அமைந்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கிய காரணத்தால் 47.1 ஓவர் முடிவில் 309 ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வென்றது நியூஸிலாந்து அணி. அதனால் 1 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலையில் உள்ளனர்.

இந்திய அணியில் நடக்க போகும் மாற்றம் :

முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் வலுவாக அமைந்தாலும் பவுலிங் வழக்கம் போல் சொதப்பியது தான் உண்மை. ஆசிய கோப்பையில் இருந்தே இந்திய அணியின் பவுலிங் மிகவும் மோசமான நிலையில் இருப்பது தான் உண்மை. அதற்கு முக்கியமான காரணம் முன்னணி பவுலர்கள் அணிய இல்லாதது. ரவீந்திர ஜடேஜா, பும்ரா போன்ற வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் சமீப காலமாக அதுவும் ஒருநாள் போட்டியில் ஆல் – ரவுண்டராக விளையாடி வரும் தீபக் சஹாருக்கு ஏன் ? முதல் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

உலகக்கோப்பை போட்டியில் பும்ரா இடம்பெறாத நிலையில் தீபக் சஹார் தான் இடம்பெற இருந்தார். ஆனால் தீடிரென்று இவருக்கும் காயம் ஏற்பட்ட காரணத்தால் உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகினார் தீபக் சஹார். அப்படி இருக்கும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் தீபக் சஹாருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், உம்ரன் மாலிக், ஷர்டுல் தாகூர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் உம்ரன் மாலிக் இரு விக்கெட்டை கைப்பற்றினாலும், அதிகப்படியான ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். அதே சமையத்தில் ஷர்டுல் தாகூர் 9 ஓவர் பவுலிங் செய்து 63 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.

அதனால் அடுத்த போட்டியில் தீபக் சஹாருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சியமாக பவுலிங் சற்று வலுவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த முடிவை கையில் எடுப்பாரா ஷிகர் தவான். ஏனென்றால், சரியான வீரர்களை தேர்வு செய்யாத காரணத்தால் மட்டுமே இந்திய அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here