இந்திய அணியில் அடுத்து டி-20 போட்டிக்கான துணை கேப்டன் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ ; list -ல எதிர்பார்காதவங்க பெயர் எல்லாம் இடம்பெற்று இருக்கிறது ;

இந்திய : வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, நான் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று உறுதியாக கூறியுள்ளார் விராட்கோலி.

அதனால் அடுத்த கேப்டன் என்ற கேள்விகள் பல எழுந்துள்ளன. ரோஹித் சர்மா தான் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் விராட்கோலிக்கு பிறகு ரோஹித் ஷர்மாவுக்கு தான் கேப்டனாக இருக்க அதிகம் அனுபவம் உள்ள வீரர் என்றால் ரோஹித் சர்மா.

இதுவரை 5 முறை ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வாங்க அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்பொழுது 34 வயதாகிவிட்டது ரோஹித் ஷர்மாவுக்கு, இதற்கு மேல் கேப்டனாக வந்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

இதற்கிடையே துணை கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளன. முதலில் கேப்டன் விராட்கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவாக இருந்தனர். இப்பொழுது விராட்கோலி க்கு பிறகு ரோஹித் சர்மா கேப்டனாக வந்தால், துணை கேப்டன் யார் ?

கண்டிப்பாக நல்ல ரன்களை அதிக கூடிய வீரர் அல்லது அதிக விக்கெட்டை கைப்பற்ற கூடிய பவுலர் தான் இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது. அப்படி பார்த்தால் இந்த மூன்று பேருக்கு தா அதிகம் வாய்ப்புள்ளது. யார் அந்த மூன்று பேர் :

கே.எல்.ராகுல்:

இந்திய அணியில் இவரது ஆட்டம் முக்கியமான ஒன்றாக தான் இப்பொழுது வரை இருக்கிறது. அதுமட்டுமின்றி டி-20 போட்டிகளில் (ஐபிஎல்) அதிரடியான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துவிட்டார். ஆனால் இவர் கேப்டனாக வழிநடத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.

ஜஸ்பிரிட் பும்ரா:

மிகச்சிறந்த பவுலரான பும்ரா துணை கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் இவர் இந்திய அணியின் முக்கியமான வீரர். இவருக்கு கேப்டனாக இருந்து எந்த அனுபவமும் இல்லை. ஆனால் அதற்கு ஏற்ற நபர் தான்.

ரிஷாப் பண்ட் :

23 வயதான ரிஷாப் பண்ட் -க்கு இன்னும் இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் எதுவும் இல்லை. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடிபட்ட காரணத்தால் ரிஷாப் பண்ட் கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பான முறையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வழிநடத்தி வந்துள்ளார். இப்பொழுது டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.