விராட்கோலி-க்கு அடுத்தது இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் கேப்டனாகும் தகுதி இந்த மூன்று வீரர்களுக்கு தான் உள்ளது ; யார் அந்த மூன்று பேர் ; முழு விவரம் இதோ ;

0

அட கடவுளே, என் விராட்கோலி இப்படி செய்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் சமுகவலைத்தளங்களில் சோகத்தை வெளிப்படுத்தி கொண்டு வருகின்றனர்.

சற்று முன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் டெஸ்ட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக தகவலை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் சமீபத்தில் தான் கேப்டன்ஷி பற்றிய சர்ச்சை மிகப்பெரிய அளவில் எழுந்தது.

டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவரே விலகினார். பின்னர் பிசிசிஐ ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவரை கேப்டன் பதவியில் இருந்து விளக்கியது பிசிசிஐ. அது விராட்கோலி (எனக்கே) தெரியாது என்று மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. அதனை எல்லாம் கடந்த பிறகு தான் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடர் போட்டிகளில் விளையாடி வந்தார் விராட்கோலி.

நேற்று நடந்தது முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடரில் தென்னாபிரிக்கா அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது. அதனால் இந்திய அணியின் கேப்டனான விராட்கோலி, டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அதனால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி இப்பொழுது மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆமாம், ஏனென்றால் இந்திய அணியில் சிறப்பாக விளையாடும் வீரரை தான் கேப்டனாக வைக்க முடியும். ஆனால் இந்த மூவரில் யாராவது ஒருவர் தான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

கே.எல்.ராகுல் ;

29வயதான கே.எல்.ராகுல் தான், டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் சமீபத்தில் நடந்த தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட்கோலி-க்கு பதிலாக கே.எல்.ராகுல் தான் இந்திய அணியை வழிநடத்தினார். அதில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது தென்னாபிரிக்கா.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக இடம்பெற்றார் கே.எல்.ராகுல். பின்னர் அவரது அருமையான ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் சிறப்பாக செய்த காரணத்தால் அசைக்கமுடியாத ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார் கே.எல்.ராகுல்.

இப்பொழுது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் இருக்கிறார். அதுமட்டுமின்றி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் ரோஹித் சர்மா. அதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக இடம்பெற்றுள்ளார். அதனால் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக கே.எல்.ராகுல் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

ரோஹித் சர்மா ;

சமீபத்தில் விராட்கோலி டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது பிசிசிஐ, உடனடியாக ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமனம் செய்தது. பின்னர் பிசிசிஐ யின் அதிரடி முடிவால் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலியை வெளியேற்றி ரோஹித் சர்மாவை அறிவித்தது பிசிசிஐ. அதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருக்கிறார் ரோஹித் சர்மா.

இதற்கிடையில் தான், விராட்கோலி இப்பொழுது டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். அதனால் மீதமுள்ள டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாகவும் ரோஹித் சர்மா தான் இடம்பெருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியின் தேர்வாளர் குழுவிற்கு சுலபமாக இருக்கும்.

ஜஸ்ப்ரிட் பும்ரா;

என்னது பவுலர் ஆ? ஆமாம், இந்திய அணியின் முன்னணி பவுலரான ஜஸ்ப்ரிட் பும்ரா தான். வருகின்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான துணை கேப்டனாக பும்ராவை நியமனம் செய்துள்ளது பிசிசிஐ. அதுமட்டுமின்றி, இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இவர் இல்லாமல் அணி இருக்காது. அதுமட்டுமின்றி பல போட்டிகளில் விளையாடிய அனுபவமும் உள்ளது.

அதனால் இவர்கள் மூவரில் ஒருவர் தான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக இடம்பெற போகிறார்கள். உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பக்கத்தில் பதிவு செய்யுங்கள்……!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here