உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்ல இது தேவை ; ஜாக்ஸ் கல்லிஸ் உறுதி ; உண்மை தானோ ?

0

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்ல இது தேவை ; ஜாக்ஸ் கல்லிஸ் உறுதி ; உண்மை தானோ ?

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 லீக் போட்டிகள் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஐசிசி அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெற உள்ளது.

இந்திய அணியின் முன்னேற்றம் :

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அனைத்து விதமான சீரியஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறது இந்திய. வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா, இலங்கை, அயர்லாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிறப்பாக விளையாடி தொடரை வென்றுள்ளது இந்திய.

அதுமட்டுமின்றி ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரின் முயற்சியால் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்திய அணியின் முக்கியமான வீக்னஸ் :

என்னதான் மற்ற அணிகளுக்கு எதிரான சீரியஸ் தொடரில் இந்திய அணி வென்றாலும், ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் இந்திய அணியின் விளையாட்டு மோசமான நிலையில் இருப்பது தான் உண்மை. ஆமாம், ஏனென்றால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய அணி வெல்லும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் சூப்பர் 4 லீக் சுற்றில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியாக தான் இருந்தது.

அதற்கு முக்கியமான காரணம் இந்திய அணியின் மோசமான பவுலிங் தான். ஆமாம், சூப்பர் 4 லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவரில் தான் தோல்வி பெற்றது இந்திய. அப்பொழுது சரியாக பவுலிங் செய்திருந்தால் நிச்சியமாக இந்திய அணி வென்றிருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.

உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி கொண்டு இருக்கும் நிலையில் ஒரு அணியில் இருக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பற்றி அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஜாக்ஸ் கல்லிஸ் இந்திய அணியை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் ” எனக்கு தெரிந்து இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் டி-20 போட்டிகளில் சிறப்பாக தான் விளையாடி வந்துள்ளனர். அதனால் அவர்களும் எனக்கு பிடித்த அணி தான், அதில் சந்தேகம் வேண்டாம். உலகக்கோப்பை போட்டிகளில் வெல்ல ஒரு மிகப்பெரிய மாற்றம் போட்டியின் இடையில் ஏற்பட வேண்டும். அப்பொழுது தான் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும்.”

“நிச்சியமாக எந்த அணியாக இருந்தாலும் சுழல் பந்து வீச்சாளர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் பொடியை மாற்றி அமைக்க போகின்றனர். அதில் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல் உள்ளனர். அதுமட்டுமின்றி இளம் சுழல் பந்து வீச்சாளரான ரவி பிஷோனியும் இடம்பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார் ஜாக்ஸ் கல்லிஸ்.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் எந்த எந்த வீரர்கள் ப்ளேயிங் 11 ல் இடம்பெற வேண்டும் ? அதற்கு காரணம் என்ன ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here