HomeTrending Newsஉங்க பேட்டிங் ஆர்டர் தான் எது ? என்ற கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரிஷாப் பண்ட்...

உங்க பேட்டிங் ஆர்டர் தான் எது ? என்ற கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரிஷாப் பண்ட் ஓபன் டாக் ;

ஒருவழியாக இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பும்ரா மற்றும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக அணிகளை வழிநடத்தி வருகின்றனர்.

போட்டியின் விவரம்:

ஜூலை 1ஆம் தேதி டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால், மழை காரணமாக ரன்களை அடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தது இந்திய.

98 ரன்கள் அடித்த நிலையில் 5 முக்கியமான விக்கெட்டை-யும் இழந்துள்ளது இந்திய. ஆனால் விஷ்வரூபம் எடுத்த இந்திய அணியின் ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரின் சதம் தான் இந்திய அணியால் அதிக ரன்களை அடிக்க காரணமாக மாறியுள்ளது.

அப்படி மட்டும் இல்லையென்றால் இந்திய அணியால் அதிகபட்சமாக 200 ரன்களை மட்டுமே அடித்திருக்க முடியும். அதிலும் ரிஷாப் பண்ட் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது போல அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளார். அதில் 111 பந்தில் 146 ரன்களை அடித்துள்ளார்.

அதில் 20 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் அதில் அடங்கும். இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்களுக்கு அவ்வப்போது வாய்ப்புகளை வழங்கி வருகிறது பிசிசிஐ. அதனால் பேட்டிங் ஆர்டர் மாறிக்கொண்டே தான் வருகிறது. ஒரு பத்திரிகையாளர் ரிஷாப் பண்ட் -டிடம் : “நீங்க எந்த பேட்டிங் ஆர்டரில் தான் விளையாடுறிங்க ? 6வாத ? அடிக்கடி மாற்றிக்கொண்டு இருக்கீங்களா ? என்று கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு ரிஷாப் பண்ட் : ” இல்லை ” என்று ஒருவார்த்தையில் பதில் கூறினார்.

பின்னர் எந்த இடத்தில் தான் நீங்க பேட்டிங் செய்துகொண்டு இருக்கீங்க என்று கேட்டதிற்கு ; நான் எப்பொழுதும் ஐந்தாவதாக தான் பேட்டிங் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் ரிஷாப் பண்ட்.

ரிஷாப் பண்ட் பினிஷராக களமிறங்கி விளையாடினால் ரன்களை அடிக்க முடியுமா ?? அல்லது 5வதாக பேட்டிங் செய்தால் சரியாக இருக்குமா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img