இப்படி பண்ணிட்டு இருந்த கண்டிப்பா உலக்கோப்பை கலந்துகொள்ளும் வாய்ப்பு நட்ராஜனுக்கு கிடைக்காது…! அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!
மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2021, இருநாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஐபிஎல் 2021 ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
அதனால் இரண்டு மாதங்களுக்கு விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்கவே இருக்காது. கடந்த அண்டி ஐபிஎல் 2020யில் சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியில் அறிமுகம் ஆனவர் நம்ம தமிழகத்தை சேர்ந்த நட்ராஜன்.
அவர் அறிமுகம் ஆன முதல் ஐபிஎல் சீசன் சிறப்பான யாக்கர் பந்துகளை வீசி பல முக்கியமான விக்கெட்டை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி யாக்கர் மன்னன் என்று அவரை அன்போடு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஐபிஎல் 2020யில் நடந்த போட்டிகளை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் கலந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்தி அவர் இந்திய அணியில் நல்ல ஒரு இடம் பிடித்துள்ளார்.
அதனப்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான தொடர் போட்டியிலும் நட்ராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. போட்டிகளில் முடிந்த பிறகு விராட் கோலி அளித்த பேட்டியில் ; அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியில் நட்ராஜன் இருப்பாரா இல்லையா என்ற கேள்வி எழுப்பினர்?
அதற்கு பதிலளித்த விராட் கோலி ; அவருக்கு சில பரீட்சை வைத்துள்ளோம். அவர் அதில் சிறப்பாக விளையாடினால் வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி வருகின்ற ஐபிஎல் 2021யில் அவரது ஆட்டத்தை முக்கியமாக கவனிக்கபடும் என்றும் சொல்லிருந்தார்.
ஆனால் நேற்று ஐபிஎல் 2021, சன்ரைசர்ஸ் ஐராபாத் அணிக்கான முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 187 ரன்களை எடுத்துள்ளனர்.
அதன்பின்னர் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோவியை சந்தித்துள்ளது. அதில் பவுலிங் வீசிய நட்ராஜன் சரமாரியாக ரன்களை கொடுத்துள்ளார். 4ஓவர் பந்து வீசிய நட்ராஜன் ஒரு விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் 37 ரன்களை கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட ஓவருக்கு 10 ரன்கள் கொடுத்துள்ளார். இப்படி செய்தால் நிச்சியமாக இந்திய அணியில் உலக்கோப்பைக்கான வீரர்களில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான். அதனால இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அதனை யோசிக்க முடியும்.
ஒரு சிறந்த பவுலர் என்றல் விக்கெட் எடுப்பது மட்டுமில்லை ரன்களை கொடுக்காமல் இருப்பதும் தான் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சாமுவலைத்தளங்களில் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.