சமீப காலமாக இந்திய அணியின் கேப்டன் சர்ச்சை தினம்தோறும் எழுந்து கொண்டே வருகின்றனர். ஆமாம் …! கடந்த ஐசிசி உலகக்கோப்பை 2021 டி-20 போட்டிக்கு பிறகு ஆரம்பித்தது இந்த பிரச்னை.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நான் ஐசிசி உலகக்கோப்பை 2021 போட்டிக்கு பிறகு டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக விராட்கோலியே அறிவித்தார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தன. ஆனால் அப்பொழுது எதுவும் பேசாத பிசிசிஐ,
தீடிரென்று விராட்கோலிக்கே தெரியாமல் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவரை வெளியேற்றினார்கள். அதனால் பிசிசிஐ-க்கும் விராட்கோலி-க்கும் மிகப்பெரிய சர்ச்சை எழுந்தன. ஆமாம்..! அதனை தொடர்ந்து இப்பொழுது தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்த பிறகு நான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


அதற்கு முக்கியமான காரணமே, இதுவரை விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒரு முறை கூட ஐசிசி கோப்பைகளை பெற்றதில்லை. ஆமாம்…! இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தான் இதுவரை அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளை தலைமை தாங்கி பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் ; விராட்கோலியை கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றியதற்கு முக்கியமான காரணமே ஐசிசி கோப்பைகள் எதுவும் வெல்லவில்லை என்பது தான்.


அது தான் அவர்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னாள் சௌரவ் கங்குலி-யும் தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அப்பொழுது அவர் (கங்குலி) தலைமையிலான இந்திய அணி எந்த உலகக்கோப்பை பெற்றுள்ளது ? இதற்கு பதில் அவருடன் உள்ளதா ?
அப்படி ஐசிசி கோப்பையை வென்றால் தான் சிறந்த கேப்டன் என்றால் ? கங்குலி, லட்சுமணன், ராகுல் டிராவிட் போன்ற வீரர்கள் யாருமே கோப்பையை வென்றதில்லை. சச்சின் டெண்டுல்கரே 6 முறை உலகக்கோப்பை போட்டியில் விளையாடி இறுதியாக ஒரு முறை தான் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.


அதனால் உலகக்கோப்பை வென்றால் தான் சிறந்த கேப்டன் என்று பார்ப்பதை விட தனிப்பட்ட முறையில் அவர்களது விளையாட்டு எப்படி உள்ளது என்பதை வைத்து தான் ஒரு வீரரை பற்றி மதிப்பிட முடியும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி.