HomeTrending Newsஇந்திய அணியின் சொதப்பல் ஆட்டத்திற்கு முக்கியமான காரணம் இதுதான் ; சரி செய்யுமா இந்திய அணி...

இந்திய அணியின் சொதப்பல் ஆட்டத்திற்கு முக்கியமான காரணம் இதுதான் ; சரி செய்யுமா இந்திய அணி ?

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று முதல் நடைபெற்று வரும் முதல் போட்டி பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன் திணறிக்கொண்டு விளையாடினாலும் ரன்களை அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 190 ரன்களை அடித்தனர். அதில் ரோஹித் சர்மா 64, சூரியகுமார் யாதவ் 24, ஸ்ரேயாஸ் ஐயர் 0, ரிஷாப் பண்ட் 14, ஹர்டிக் பாண்டிய 1, ரவீந்திர ஜடேஜா 16, தினேஷ் கார்த்திக் 41, ரவிச்சந்திரன் அஸ்வின் 13 ரன்களை அடித்துள்ளனர்.

அதனால் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதற்கிடையில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலாக தான் இருந்தது. ஆமாம், இந்திய அணியில் யார் தொடக்க வீரர் என்பதையே இன்னும் முடிவு செய்யவே முடியாமல் தவித்து வருகிறது.

இஷான் கிஷான் விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் தான் தொடக்க வீரர் என்று சில போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடினார். ஆனால் இப்பொழுது தீடிரென்று மிடில் பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் தொடக்க வீரராக அறிமுகம் ஆகியுள்ளார்.

இது நிச்சியமாக ரோஹித் ஷர்மாவின் முடிவாக தான் இருக்கும். அவரை தொடர்ந்து மிடில் ஆர்டர் மிகவும் மோசமான நிலையில் பேட்டிங் செய்தனர்.ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் சரியாக விளையாடாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.

இந்திய அணிக்கு சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் யாராக இருக்க முடியும் ? கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாட பெயர் இடம்பெற்றாலும், தீடிரென்று அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரோஹித், இஷான் கிஷான் அல்லது ரோஹித் , ரிஷாப் பண்ட் இதில் எந்த பார்ட்னெர்ஷிப் சரியாக இருக்கும் ?

சூரியகுமார் எப்பொழுதும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அப்படி இல்லையென்றால் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஷிகர் தவான் தொடக்க வீரராக இந்திய அணியில் இடம்பெற வேண்டுமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img