HomeTrending Newsஇந்திய அணியிடம் இது இருக்கிறது ; ஆனால் வெற்றி எங்களுக்கு தான் ; சவுத் ஆப்பிரிக்கா...

இந்திய அணியிடம் இது இருக்கிறது ; ஆனால் வெற்றி எங்களுக்கு தான் ; சவுத் ஆப்பிரிக்கா வீரர் கீகன் பீட்டர்சன் ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

கடந்த 11ஆம் அன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் -ல் களமிறங்கிய இந்திய அணி விராட்கோலயை தவிர்த்து மிதமுள்ள எந்த இந்திய வீரரும் அதிக ரன்களை அடிக்கவில்லை. அதனால் 223 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது இந்திய.

அதில் கே.எல்.ராகுல் 12, மயஙக் அகர்வால் 15, புஜரா 43, விராட்கோலி 79, ரஹானே 9, ரிஷாப் பண்ட் 27, ரவிச்சந்திரன் அஸ்வின் 2, ஷர்டுல் தாகூர் 12, பும்ரா 0, உமேஷ் யாதவ் 4, முகமது ஷமி 7 ரன்களை அடுத்துள்ளனர். பின்னர் முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 210 ரன்கள் அடித்த நிலையில் சுருண்டது.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் – ல் களமிறங்கிய 198 ரன்களை அடித்த நிலையில் சுருண்டது இந்திய . அதில் அதிகபட்சமாக 100 ரன்களை அடித்துள்ளார். மேலும் கே.எல்.ராகுல் 10, மயங்க் அகர்வால் 7, புஜரா 9, விராட்கோலி 29, ரஹானே 1, ரிஷாப் பண்ட் 100,ரவிச்சந்திரன் அஸ்வின் 7, தாகூர் 5, உமேஷ் மற்றும் ஷமி ஆகிய இருவரும் 0 மற்றும் பும்ரா 2 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர், 212 ரன்களை அடித்தால் வெற்றி என்று இலகுடன் களமிறங்கிய சவுத் ஆப்பிரிக்கா அணி. 63.3 ஓவர் முடிவில் 212 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது தென்னாபிரிக்கா அணி. அதனால் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா அணி.

போட்டி முடிந்த பிறகு சவுத் ஆப்பிரிக்கா அணியின் வீரரான கீகன் பீட்டர்சன் அளித்த பேட்டியில் ; சாத்தியமா இந்த மாதிரி நிலைமை ஏற்படும் என்று நான் ஒருதுளி கூட எதிர்பார்க்கவில்லை. இந்த ஒரு சூழ்நிலையில் விளையாடுவது கடினம் தான். ஆனால் அதில் அப்படியே ஒன்றி நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.

இது ஒரு பெரிய கதை, அதனை இப்பொழுது இங்க சொல்ல முடியாது. பிட்ச் மற்றும் எதிர் அணியின் பவுலிங் அட்டாக் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது தான் உண்மை. எனக்கு நிச்சியமாக தெரியும், எதிர் அணியில் (இந்திய) வில் இருக்கும் வீரர்கள் அனைவரும் திறமையான பவுலர்கள் என்று, அதுமட்டுமின்றி திறமையான அணியும் கூட.

எங்களுடைய ஒரே எண்ணம் எதிர் அணியுடன் மோதி வெல்ல வேண்டும் என்பது மட்டும் தான். அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டியில் அதிக நேரம் பேட்டிங் செய்வது மிகவும் முக்கியமான ஒன்று அதனை நான் ரசித்தேன் என்று கூறியுள்ளார் கீகன் பீட்டர்சன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img