HomeTrending Newsவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இதை செய்தால், இந்தியாவுக்கு உலகசாதனை உறுதிதான் ; முழு...

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இதை செய்தால், இந்தியாவுக்கு உலகசாதனை உறுதிதான் ; முழு விவரம் இதோ ;

இன்று இரவு 7 மணியளவில் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் முதல் ஒருநாள் போட்டியில் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன…!

indian Team 2

சம்பித்தில் தான் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் டி-20 தொடர் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்ததால் தொடரை கைப்பற்றியுள்ளது. வெற்றியை பெற்ற சந்தோசத்தில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள போகிறது இந்திய.

வெஸ்ட் இண்டீஸ் அணி என்னதான் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் ஒருநாள் போட்டிகளில் வெற்றியை கைப்பற்ற திணறிக்கொண்டு தான் வருகிறது. ஆமாம், சமீபத்தில் தான் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் தொடர் போட்டிகளில் விளையாடியது வெஸ்ட் இண்டீஸ்.

அதில் ஒருநாள் போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடரை கைப்பற்ற முடியாமல் போனது. அதனால் இந்திய அணிக்கு சற்று சுலபமாக இருக்கலாம். ஆனால் , இந்த முறை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட்கோலி, பும்ரா, ஷமி போன்ற முன்ணனி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த முறை தவான் தலைமையிலான இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளது பிசிசிஐ. தொடரை கைப்பற்றுமா இந்திய அணி ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..! இதற்கிடையில், இந்திய அணி இந்த தொடரில் வென்றால், இரு உலகசாதனையை செய்ய போகிறது.

முதல் 1 :

ஒரு அணியை எதிர்த்து தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான தொடரில் அதிக முறை வென்ற அணியின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது இந்திய. ஆமாம், கடந்த 2007 ஆண்டு முதல் 2022 வரை வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து இந்திய அணி தொடர்ந்து 11 சீரியஸ் தொடரில் வென்றுள்ளனர்.

இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணியில் உள்ளது. ஜிம்பாபே அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி இதுவரை தொடர்ந்து 11 போட்டிகளில் வென்றுள்ளனர். அதனால் இந்த தொடரில் இந்திய அணி வென்றால் 12 சீரியஸ் போட்டிகளில் வென்று முதல் அணியாக திகழும்.

இரண்டாவது :

இன்று நடைபெற உள்ள போட்டி போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று மட்டும் இந்திய அணி வென்றால் ஒரே மைதானத்தில் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்திய அணி முதல் இடத்தை கைப்பற்றும். இதுவரை, போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடிய 9 போட்டியில் வென்றுள்ளது இந்திய என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img