HomeTrending Newsதங்கத்தை பறிகொடுத்த இந்திய பெண்கள் அணி ; இந்த இடத்தில் தான் தவறு நடந்துள்ளது ;...

தங்கத்தை பறிகொடுத்த இந்திய பெண்கள் அணி ; இந்த இடத்தில் தான் தவறு நடந்துள்ளது ; வருத்தத்தில் இருக்கும் இந்திய ரசிகர்கள் ;

கடந்த ஜூலை 29ஆம் தேதி முதல் தொடங்கியது காமன்வெல்த் கிரிக்கெட் போட்டி 2022. அதில் மொத்தம் 8 அணிகளை கொண்டு விளையாட தொடங்கினார்கள். அதில் ஏ பிரிவில் இந்திய, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பார்படோஸ் அணியும். பி பிரிவில் இங்கிலாந்து, நியூஸிலாந்து , தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணியும் இடம்பெற்றுள்ளனர்.

அதில் இந்திய அணி மூன்று போட்டியில் 2 போட்டியில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதி போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. நேற்று நடந்த இறுதி போட்டியில் ஹர்மான்ப்ரீட் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், லென்னிங் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோதின.

அதில் டாஸ் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மூனேவின் அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 161 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ஹீலி 7, மூனே 61, லென்னிங் 36, கார்ட்னர் 25 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ம்ரிதி மந்தன எதிர்பாராத வகையில் 6 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்த காரணத்தால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் யார் ரன்களை அடிக்க போகிறார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்திய அணியின் கேப்டனான ஹர்மான்ப்ரீட் கவுர் அதிரடியாக விளையாடி 65 ரன்களை குவித்தார்.

இருப்பினும் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த இந்திய அணியால் சரியாக ரன்களை அடிக்க முடியாமல் போனது. இறுதி ஒவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் தொடர்ந்து இறுதியாக இருந்த இரண்டு விக்கெட்டையும் இழந்த நிலையில் இந்தியா அணி தோல்வியை சந்தித்தது. இறுதி வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 152 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்று தங்கம் வென்றுள்ளனர்.

லீக் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை கைப்பற்றியது ஆஸ்திரேலியாவிடம் தான், இறுதி போட்டியிலும் தோல்வி பெற்றது ஆஸ்திரேலியாவிடம் தான். நிச்சியமாக இந்த முறை ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி பழிதீர்த்துக்கொள்ளும் என்று பலர் நினைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img