தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் இதுவாக தான் இருக்கும் ;

0

அட போங்க பா…!! கடுமையான கோபத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். எப்படியாவது தொடரை கைப்பற்றிவிடும் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கும் நேரத்தில் இப்படி எல்லாம் செய்தால் எப்படி ?

கடந்த 11ஆம் தேதி அன்று மதியம் 1 ;30 மணியளவில் தொடங்கியது மூன்றாவது டெஸ்ட் போட்டி. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி, 223 ரன்களை அடித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 210 ரன்களில் சுருண்டது.

அதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது. பின்னார் இரண்டாவது இன்னிங்ஸ்ல் களமிறங்கிய இந்திய அணி 198 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர். 212 ரன்கள் அடித்தால் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெறும் அல்லது 10 விக்கெட்டையும் இழந்தால் இந்திய அணி வெற்றி பெறும்.

ஆனால் அது இந்திய அணிக்கு எமனாக மாறியுள்ளது என்பது தான் உண்மை. ஏனென்றால் இந்திய அணியின் பவுலர்களால் சரியாக விக்கெட்டை எடுக்க முடியவில்லை. அதனால் வெறும் 3 விக்கெட் இழந்த நிலையில் 212 ரன்களை அடித்து பெற்றி பெற்றது தென்னாபிரிக்கா அணி. அதனால் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா.

அதனால் மிகவும் கோபத்தில் உள்ளனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். ஆமாம், இதுவரை ஒருமுறை கூட இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் தொடரை கைப்பற்றியதே இல்லை. ஆனால் இந்த முறை முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற காரணத்தால் கண்டிப்பாக தொடரை கைப்பற்றும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.

அதற்கு முக்கியமான காரணம், முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி அதிக ரன்களை அடித்தது இந்திய கிரிக்கெட் அணி. அதன்பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் கிட்ட தான் அடித்துள்ளது இந்திய. முதல் காரணம் சரியான பேட்டிங் இல்லாதது தான். இரண்டாவது காரணம் பவுலிங் தான்.

ஆமாம், முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் தான், இந்திய அணியின் பவுலர்களால் தென்னாபிரிக்கா அணியின் அனைத்து விக்கெட்டையும் கைப்பற்ற முடிந்தது. ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதனை செய்ய இந்திய பவுலர்கள் தவறவிட்டனர். அதன்விளைவாக தான் தோல்வியே…!!! இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் தென்னாபிரிக்கா அணியின் கேப்டனான டீன் எல்கர் அதிரடியாக விளையாடி 96 ரன்களை அடித்து வெற்றி பெற காரணமாக இருந்தார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணியின் வீரரான கீகன் பீட்டர்சன் இறுதி வரை விளையாடி ஆட்டம் இழக்காமல் 82 ரன்களை அடித்தனர். அதனால் வெற்றி பெற முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here