அட கடவுளே ; இவர் தான் சரியாகவே பேட்டிங் செய்வதில்லை ; ஆனால் தொடர்ந்து அணியில் நீட்டிப்பது ஏன் ? அடுத்த டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு இருக்குமோ ?

0

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதனை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர். அதிலும் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தியது இந்திய.

ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று பழிதீர்த்து கொண்டது. அதனால் இப்பொழுது 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டி நாளை மதியம் நியூலாண்ட் மைத்தனத்தில் நடைபெற உள்ளது.

அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே தொடரை கைப்பற்ற முடியும். அதுமட்டுமின்றி, இதுவரை இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் ஒருமுறை கூட தொடரை கைப்பற்றியது இல்லை. யார் வெற்றி பெற போகிறார் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. சமீப காலமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷாப் பண்ட் சரியாகவே விளையாடுவது இல்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் அசத்தலாக விளையாடிய ரிஷாப் பண்ட் இப்பொழுது காணவில்லை !

ஏனென்றால் இதுவரை நடந்து முடிந்துள்ள தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்தாரா ?? என்ற கேள்வி தான் எழுகின்றது. ஆமாம் .. ! அந்த அளவுக்கு மோசமான ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ் சேர்த்து 42 ரன்களையும்,

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 17 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதிலும் ஒருமுறை டக் அவுட் ஆகியுள்ளார் ரிஷாப் பண்ட். இப்பொழுதெல்லாம் ரிஷாப் பண்ட் அந்த அளவுக்கு பேட்டிங் செய்வதே இல்லை. என்ன செய்ய போகிறார் விராட்கோலி ?

ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக விர்த்திமன் சாகா, ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றால் சிறப்பான மிடில் ஆர்டர் அமைய அதிக வாய்ப்புள்ளது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமாகி முதல் சதம் அடித்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

அதனால் ரிஷாப் பண்ட்-க்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றால் சிறப்பான ஆட்டம் அமைய அதிக வாய்ப்புள்ளது…! கிரிக்கெட் ரசிகர்கள் ஆகிய உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here