ஹேப்பி நியூஸ் ..! இந்திய அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது ; ஆனால் இது நடந்தால் தான் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும் ;

0

ஆசிய கோப்பை : ஆசிய கோப்பை 2022 போட்டிகள் கடந்த மாதம் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆனால் அதில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகின்றனர். சூப்பர் 4 லீக் சுற்றில் மொத்தம் 3 அணிகளை எதிர்த்து விளையாடும் இந்திய. அதில் குறைந்தது இரு போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு அதற்கு எதிர்மாறாக நடைபெற்று முடிந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் கடினமாக இறுதி வரை போராடி தோல்விகளை பெற்றுள்ளது இந்திய. இன்னும் மீதமுள்ள ஒரு போட்டி மட்டும் தான். அதில் ஆவது இந்திய அணி வெற்றி பெறுமா ? என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இருப்பினும் இன்னும் ஒரு இறுதி வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது. ஆனால், அது நடைபெறுமா ? இல்லையா ? என்பது தான் சந்தேகம். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற வேண்டும்.

அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டியது மிகவும் முக்கியம். ஏனென்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணி தலா 2 புள்ளிகளுடன் இருக்கும்போது அதிகப்படியான ரன் ரெட் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும்.

இதில் ஏதாவது ஒன்று நடைபெறவில்லை என்றாலும் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆசிய கோப்பை 2022 போட்டிக்கான இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்புகள் இருக்காது என்பது தான். கடந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு அனைத்து அணிகளுக்கு இடையேயான சீரியஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறது இந்திய.

ஆனால் ஐசிசி, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் இந்திய அணி சொதப்பலாக விளையாடி வருகிறது தான் உண்மை. ப்ளேயிங் 11 வீரர்களை தேர்வு செய்தது தவறா ? அல்லது ஆசிய கோப்பை போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்தது தவறாக இருக்குமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here