இவருக்கு ஏன் ? வாய்ப்பு கொடுக்கவில்லை ..! இறுதி போட்டியில் விளையாட இந்திய அணிக்கு தகுதி இல்லை ; ஷோயிப் அக்தர் ஓபன் டாக் ; கடுப்பான இந்திய ரசிகர்கள் ;

0

இந்திய கிரிக்கெட் அணி டி-20 2022 உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி முதல் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

போட்டியின் சுருக்கம் :

லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி குரூப் 2ல் முதல் இடத்தை கைப்பற்றியது இந்திய. நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருந்தாலும் இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய நிலையில் 20 ஓவர் முடிவில் 168 ரன்களை அடித்தது இந்திய.

பின்பு 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு வெற்றி கிடைத்தது. அதுவும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றதா நிலையில் மோசமான பவுலிங் செய்த இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வென்று பாகிஸ்தான் அணியை இறுதி போட்டியில் விளையாட உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியை பற்றிய விமர்சனம் :

உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் தோல்வி பெற்றால் நிச்சியமாக பல விமர்சனங்கள் எழும். அதேபோல தான் இப்பொழுது இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் முக்கியமான காரணம் என்று அவரவர் கருத்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கூறியுள்ளார். அதில் “இந்த இழப்பு இந்திய அணிக்கு மிகவும் சங்கடமான இழப்பு தான். மோசமாக விளையாடிய இந்திய அணிக்கு தோல்வி கிடைத்தது தான் சரி.”

“இறுதி போட்டிக்கு முன்னேறும் அளவிற்கு இந்திய அணிக்கு தகுதி இல்லை. இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி இந்திய அணியை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளார். அதுமட்டுமின்றி, இந்திய அணியின் பவுலிங் மோசமான நிலையில் உள்ளனர். இங்கு (ஆஸ்திரேலியா) இருக்கும் நிலை வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும், ஆனால் அதுவும் இந்திய அணிக்கு அமையவில்லை. ஏன் ? யுஸ்வேந்திர சஹாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை ? எனக்கு தெரிந்து இந்திய அணியை தேர்வு செய்ததில் பல குழப்பங்கள் இருக்கும் போல.”

“உண்மையிலும் இந்த தினம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமான நாள் தான். முதல் 5 ஓவரில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடிய நிலையில் இந்திய பவுலர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆனால் முடிந்தவரை ஏதாவது இந்திய அணி செய்திருக்க வேண்டும். எனக்கு தெரிந்து இந்திய வீரர்கள் இடையே வெற்றிபெறும் நோக்கம் இல்லாதது போல தான் தெரிகிறது என்று கூறியுள்ளார் ஷோயிப் அக்தர்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here