இதனையா ..!!! செய்ய போகிறது இந்திய கிரிக்கெட் அணி ; முன்னாள் பாகிஸ்தான் வீரர் ..! அப்படி என்ன செய்ய போகிறது இந்திய அணி தெரியுமா?

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான Inzamam-ul-Haq சமீபத்தில் அளித்த பேட்டியில் ; இந்திய கிரிக்கெட் அணி தான் முதல் முதலில் சர்வேதச போட்டியில் ஒரே நேரத்தில் இரு அணிகளாக வெவ்வேறு அணிகளுக்கு எதிராக களமிறங்க உள்ளது.

அதில் இந்தியா அணியின் ஏ பிரிவை சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும், இந்திய அணியின் “பி” பிரிவை சேர்ந்த வீரர்கள் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் விளையாட உள்ளது. பிசிசிஐ எடுத்தா இந்த முடிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது.

இரண்டாவதாக தயாராகியுள்ள இந்திய அணியை பார்க்க மிகவும் ஆர்வகமாக இருக்கிறது. இன்றைக்கு இந்திய கிரிக்கெட் அணி என்ன முடிவு செய்ததோ, அதேதான் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா அணி இதனை செய்ய முயற்சி செய்தது, ஆனால் அதனை தவறவிட்டது.

எனக்கு தெரிந்து இதுதான் முதல் முறை, சர்வதேச கிரிக்கெட் அணி, ஒரே சமையத்தில் இரு அணிகளாக பிரிந்து ஒரு அணி ஒரு நாட்டிலும், இன்னொரு அணி இன்னொரு நாட்டிலும் நடைபெற உள்ளது. கடந்த 1995ஆம் முதல் ஆஸ்திரேலியா அணி ஒரே சமையத்தில் இரு அணிகளாக பிரிந்து விளையாட இருந்தனர்.

ஆனால் அதற்க்கான அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் இப்பொழுது இருக்கும் வீரர்களில் இந்திய அணியின் பலம் மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியில் விளையாட திறமை வாய்ந்த வீரர்கள் அதிகம் உள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளின் மூலம் நெறைய இளம் வீரர்கள் அவரவர் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியால் சுலபமாக 50 வீரர்களை சர்வதேச போட்டிகளில் விளையாட வைக்க முடியும், அந்த அளவுக்கு திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரர் கூறியுள்ளார்.