நேற்று இரவு போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.


அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 311 ரன்களை அடித்தது. அதில் ஷாய் ஹோப் 115, மாயேர்ஸ் 39, ப்ரூக்ஸ் 35, நிக்கோலஸ் பூரான் 74, பவல் 13, ஷெப்பர்ட் 15 ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. அதில் தொடக்க வீரரான ஷிகர் தவான் (கேப்டன்) எதிர்பாராத விதமாக 13 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அதன்பின்னர் பேட்டிங் செய்து அனைவரும் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தனர். இறுதி ஓவர் வரை போராடிய இந்திய அணியின் வீரர்களால் 49.4 ஓவர் முடிவிலே 312 ரன்களை அடிக்க முடிந்தது. அதனால் இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.


அதுமட்டுமின்றி இதுவரை நடந்த இரு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால் ஒருநாள் போட்டிக்கான தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் யார் என்று கேட்டால் ? அது நிச்சியமாக ஆல் – ரவுண்டர் அக்சர் பட்டேல் தான். ஏனென்றால் ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த நிலையில் 7வதாக களமிறங்கிய அக்சர் பட்டேல் தான் வெற்றிக்கு முக்கியமான காரணம்.
ஆமாம், ஏதோ டி-20 போட்டிகளில் விளையாடுவதை போல சிறப்பாக பேட்டிங் செய்த அக்சர் பட்டேல், அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதுவும் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 35 பந்தில் 64 ரன்களை அடித்துள்ளார். அதில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் அதில் அடங்கும். அக்சர் பட்டேல் மட்டும் விரைவாக ஆட்டம் இழந்திருந்தால் நிச்சியமாக இந்திய அணிக்கு தோல்வி தான் கிடைத்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..!