இந்திய அணியில் ரன்களை அடிக்க இவருக்கு ஒரு தடங்கலும் இல்லை ; கெவின் பீட்டர்சன் பேட்டி ; முழு விவரம் இதோ ;

இதுவரை 23 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் துபாய் சர்வதேச மைதானத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளனர்.

இப்பொழுது குரூப் B புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியும், இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியும், மூன்றாவது இடத்தில் நமீபியா அணியும், நான்காவது இடத்தில் நியூஸிலாந்து அணியும், ஐந்தாவது இடத்தில் இந்திய அணியும், ஆறாவது இடத்தில் ஸ்காட்லாந்து அணியும் உள்ளனர். இதில் முதல் அணிகள் மற்றுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறமுடியும்…!

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் அளித்த பேட்டியில் ; இவர் தான் அதிக ரன்களை அடிக்க போகிறார் என்று இந்திய அணியின் வீரரை பற்றி கருத்தை கூறியுள்ளார்…! அதனை பற்றி பேசிய கெவின் ;

இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆன ரோஹித் சர்மா தான் அதிக ரன்களை அடிக்க போகிறார். ஏனென்றால் அவர் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். எனக்கு தெரிந்து இந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2021 போட்டிகளில் கஷ்டப்படுவது போல, தெரியவில்லை என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன்.

ரோஹித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி ஒரு ரன்களை கூட அடிக்காமல் ஆட்டத்தை இழந்தார்…! அதுமட்டுமின்றி, இந்திய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி…!

அதுமட்டுமின்றி, இனிவரும் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றால் மட்டுமே ஐசிசி உலகக்கோப்பையை கைப்பற்றும் எண்ணம் இருக்க வேண்டும். ஒருவேளை வருகின்ற 31ஆம் தேதி அன்று நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் பின்னர் அரை இறுதிக்கு செல்வது மிகவும் கடினமாக போய்விடும்..!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இந்திய அணியின் வீரர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றதால் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்….!!