HomeTrending Newsஇந்திய அணியின் நம்பிக்கைநாயகனின் சொதப்பல் ஆட்டம் ; இவர் என்ன இப்படி விளையாடுகிறார் ? வருத்தத்தில்...

இந்திய அணியின் நம்பிக்கைநாயகனின் சொதப்பல் ஆட்டம் ; இவர் என்ன இப்படி விளையாடுகிறார் ? வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள் ;

இன்று இரவு 8 மணியளவில் தொடங்கிய நான்காவது டி-20 போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்தனர். இருப்பினும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 191 ரன்களை அடித்தனர்.

அதில் ரோஹித் சர்மா 33, சூரியகுமார் யாதவ் 24, தீபக் ஹூடா 21, ரிஷாப் பண்ட் 44, சஞ்சு சாம்சன் 30*, தினேஷ் கார்த்திக் 6, அக்சர் பட்டேல் 20* ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வருமா ?

இதில் இந்திய அணி வெற்றியை கைப்பற்றுவதை விட ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெறுவது தான் மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் அதற்கு தவுந்த வீரர்களை இந்திய அணி தேர்வு செய்ய இந்த மாதிரியான போட்டிகள் உதவியாக இருக்கும்.

அதிலும் ஐபிஎல் 2022யில் பெங்களூர் அணியில் சிறந்த பினிஷர் என்ற ரசிகர்களால் பாராட்ட பட்டவர் தான் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக். அதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா அணியில் கம்பேக் கொடுத்தார். அதுவும் குறிப்பாக டி-20 போட்டிகளில்.

இறுதியான நேரத்தில் அவரது அதிரடியான ஆட்டம் நிச்சியமாக இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக மாறியது. அதனால் ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022யில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சியமாக இடம்பெறுவார் என்று கருதப்படும் நேரத்தில் தினேஷ் கார்த்திக்கின் விளையாட்டு கவலையாக உள்ளது.

ஆமாம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 41* ரன்களை விளாசினார். ஆனால் இரண்டாவது போட்டியில் 7 ரன்களையும், நான்காவது போட்டியில் 6 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இந்த மாதம் இறுதியில் ஆசிய கோப்பை போட்டியில் நிச்சியமாக தினேஷ் கார்த்திக் இடம்பெறுவர். அதில் இதுபோல சரியாக விளையாடவில்லை என்றால் பின்பு உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறுவது சந்தேகம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img