இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 3 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியை வாஷ்-அவுட் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் :
கடந்த 2021ஆம் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆன வீரர் தான் சூர்யகுமார் யாதவ். இவர் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் மிடில் ஆர்டரில் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி வருகிறார்.

இவரது பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் போன்ற போட்டிகளை காட்டிலும், டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.
இதுவரை 45 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 1578 ரன்களை அடித்துள்ளார். அதில் 3 சதம் மற்றும் 13 அரைசதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற சூர்யகுமார் யாதவ் :
கடந்த ஆண்டு 2022க்கான டி-20 வீரருக்கான விருது இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யதாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி பேசிய சூரியகுமார் யாதவ் கூறுகையில் : “விருது கிடைத்தது பெருமையாக தான் இருக்கிறது, அதிலும் 2022 ஆம் ஆண்டு எனக்கு சிறப்பாகவே அமைந்தது. எனக்கு தனிப்பட்ட முறையில் நான் அடித்த சில முக்கியமான ஷாட்ஸ் மறக்க முடியாத ஒன்று.”

“அதிலும் குறிப்பாக நான் அடித்த முதல் சதம் தான். ஆமாம், எப்பொழுதுமே நாட்டுக்காக அடித்த முதல் சதம் என்பது மறக்க முடியாத ஒன்று தான் என்று கூறியுள்ளார் சூரியகுமார் யாதவ்.”
விருது பெற்ற சூர்யகுமார் யதாவுக்கு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
0 Comments