ஆசிய கோப்பையில் ராகுல் டிராவிட் பயிற்சியளராக இருப்பது கடினம் தான் ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ; காரணம் இதுதான் ;

0

ஆசிய கோப்பை 2022:

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

பங்கேற்க போகும் முக்கியமான அணிகள் :

இதில் மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். அதில் இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்று ஐந்து அணிகள் உறுதியாகியுள்ளது. மீதமுள்ள இறுதி இடத்திற்கு (குவைத், ஐக்கிய அரபு, சிங்கப்பூர் மற்றும் ஹாங் காங்) போன்ற நான்கு நாடுகள் தகுதி சுற்று போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

அதில் இறுதியாக வெல்லும் அணிதான் ஆசிய கோப்பையில் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளது. இதுவரை நடந்து முடிந்த தகுதி சுற்று போட்டிகளில் ஐக்கிய அரபு தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் நிலவரம்:

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தான் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. அதில் பல வீரர்கள் எதிர்பார்த்த படி தான் அமைந்துள்ளனர். ஆனால் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு தீடிரென்று காயம் ஏற்பட்டுள்ளது, அதனால் ஆசிய கோப்பைக்கான போட்டியில் இடம்பெறாதது அதிர்ச்சியாக உள்ளது.

இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்திய வீரர் இன்னும் இரு தினங்களில் ஐக்கிய அரபு சென்று பயிற்சியை தொடங்க போகின்றனர். இதற்கிடையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்-க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு தான்.

கடந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2021 போட்டிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்ற ராகுல் டிராவிட் சிறப்பாக அணியை வழிநடத்தி பல போட்டிகளில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். அதனால் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கம்போ சிறப்பாக உள்ளது என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு (ராகுல் டிராவிட்) கொரோனா ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த முறை வி.வி.எஸ். லட்சுமண் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ராகுல் டிராவிட் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா ?

ஆசிய கோப்பையில் விளையாட போகும் இந்திய அணியின் விவரம் :

(கேப்டன்) ரோஹித் சர்மா, (துணை கேப்டன்) கே.எல்.ராகுல், விராட்கோலி, ரவி பிஷானி, யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹர்டிக் பாண்டிய, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here