இந்திய அணியின் கனவை பறித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ; வருத்தத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ;

0

ஆசிய கோப்பை : ஆசிய கோப்பை 2022 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட இறுதி போட்டியை எட்டியுள்ளது ஆசிய கோப்பை 2022. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தான் இறுதி போட்டியில் விளையாட உள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி :

நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், முகமத் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை. பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தது ஆப்கானிஸ்தான் வீரர்கள். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 129 ரன்களை அடித்தனர்.

அதில் சாசாய் 21, குர்பஸ் 17, சட்ரன் 35, ஜெனட் 15, நஜிபுல்லாஹ் 10, அஸ்மதுல்லாஹ் 10, ரஷீத் கான் 18 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. ஆனால் இந்த முறை பாகிஸ்தான் வீரர்களுக்கு சரியாக தொடக்க ஆட்டம் அமையவில்லை.

அதிலும் நம்பிக்கை நாயகன் பாபர் அசாம் தொடர்ந்து பெரியளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்து கொண்டே வருகிறார். இறுதி ஓவர் வரை போராடிய பாகிஸ்தான் வீரர்கள் இறுதி ஓவரில் 19.2 தான் 131 ரன்களை அடித்து ஆப்கானிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி.

அதில் ரிஸ்வான் 20, அஹ்மத் 30, ஷதாப் கான் 36, முகமத் நவாஸ் 4, ஆசிப் அலி 16, நசீம் ஷா 14 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளார். அதனால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா இரு போட்டிகளில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

இந்திய கனவை பறித்த பாகிஸ்தான் :

ஆசிய கோப்பையின் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த இந்திய அணி, இப்பொழுது நடைபெற்று வரும் சூப்பர் 4 லீக் போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் விளையாடி கொண்டு வருகின்றனர். ஆமாம், தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் தோல்வியை கைப்பற்றியுள்ளது.

இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியை வென்றாலும் இறுதி போட்டிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த கனவை பறித்தது பாகிஸ்தான் அணி. ஏனென்றால் நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவும், நாளை நடைபெற உள்ள போட்டியில் இலங்கை அணியும் வென்றிந்தால் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால் எதிர்பாராத விதமாக நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. அதனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் அதிகபட்சமாக தலா இரு போட்டிகளில் வென்ற நிலையில் 4 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர். இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணி அடுத்த போட்டியில் வென்றால் கூட 2 புள்ளிகள் மட்டும் தான் கிடைக்கும். அதனால் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here