இரண்டாவது ஆசிய கோப்பை போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் விளையாடி வருகின்றனர்.


இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இறுதிவரை போராடி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 147 ரன்களை அடித்தனர். பின்பு 148 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது இந்திய.
அதில் 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 62 ரன்களை அடித்துள்ளது இந்திய. இன்னும் 10 ஒவேரில் 86 ரன்களை அடிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது இந்திய. ரோஹித் சர்மா 12, கே.எல்.ராகுல் 0, விராட்கோலி 35 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளனர். இப்பொழுது ரவீந்திர ஜடேஜா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து விளையாடி வருகின்றனர்.
இதில் எதற்கு கே.எல்.ராகுலுக்கு தொடக்க வீரராக வாய்ப்பு கொடுத்தீர்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஆமாம், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்துள்ளார். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


இரு மாதங்களுக்கு முன்பு காயம் காரணமாக ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். பின்பு, கொரோனா காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாட முடியாமல் போனது. பின்பு ஆசிய கோப்பையில் தேர்வான காரணத்தால் ஜிம்பாபே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் இடம்பெற்று விளையாடி வந்துள்ளார்.
ஆனால் அதில் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. இரு போட்டிகளில் பேட்டிங் செய்து 1, 30 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அதனால் நிச்சியமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 ஆசிய கோப்பைக்கான போட்டியில் இந்திய அணியில் விளையாட வைத்து ரிஸ்க் எடுக்கமாட்டார்கள் என்று பலர் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.
ஆனால் இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல் இடம்பெற்றது பலருக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அதுமட்டுமின்றி அனைவரும் பயந்தது போலவே எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். இதற்கு இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்ட் அணியில் இடம்பெற்றிருந்தால் நிச்சியமாக இந்திய அணிக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.
காயம் காரணமாக ஓய்வு எடுத்த கே.எல்.ராகுல் ஜிம்பாபே தொடரிலும் பெரிய அளவில் விளையாடவில்லை. அப்படி இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றது சரியா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!