தென்னாபிரிக்கா தொடரில் இருந்து வெளியேறிய இந்திய வீரர் ; டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் சந்தேகம் தான் ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ;

0

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடர்:

நேற்று இரவு முதல் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டிகள் நடைபெற தொடங்கியது. மொத்தம் 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளனர். நேற்று நடந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தியுள்ளது.

டி-20 உலகக்கோப்பை போட்டி :

இந்த ஆண்டு ஐசிசி டி-20 போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது. அது மட்டுமின்றி சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க போகும் இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி காத்திருப்பு பட்டியலில் முகமத் ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷானி மற்றும் தீபக் சஹார் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மோசமான நிலையில் இந்திய அணி வெளியேறியது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த ஆண்டு ஐசிசி டி-20 கோப்பைக்கான போட்டியில் வெல்லுமா ?

முன்னணி வீரர் காயம் காரணமாக தீடிர் விலகல் :

நேற்று நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரிட் பும்ரா அணியில் இல்லாதது பெரிய இழப்பாக இருந்தது. ஆனால் தீபக் சஹார் அதனை மறக்கடித்துவிட்டார் என்பது தான் உண்மை. நேற்று காலையில் பும்ரா பயிற்சி மேற்கொண்டு இருக்கும்போது அவருடைய காலில் தசை பிடித்துவிட்டது.

அதனால் இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை என்று ரோஹித் சர்மா கூறினார். ஆனால் இன்று சற்றுமுன் வெளியான தகவலின் படி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடரில் இருந்தே பும்ராவை வெளியேற்றியுள்ளது பிசிசிஐ. இதனை பற்றி பேசிய பிசிசிஐ உறுப்பினர்கள் ; ” அவருடைய காயம் ஏற்பட்டுள்ளது, அவரால் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாது, இருப்பினும் இந்திய அணியின் மருத்துவ குழு அவரை கண்கணித்து கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த் ஆசிய கோப்பையில் இந்திய அணியில் பும்ரா இல்லாதது பெரிய இழப்பாக தான் பார்க்கப்பட்டது. ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெற்று டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் விளையாடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் இந்த சம்பவம் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை.

டி-20 உலகக்கோப்பை போட்டியில் பும்ரா இடம்பெறுவாரா இல்லையா ? என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஒருவேளை பும்ரா இடம்பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here