HomeTrending Newsஅந்த ஒரு கேட்ச் மிஸ் செய்தது தான் முக்கியமான காரணம் ; கடுப்பில் இருக்கும் ரோஹித்...

அந்த ஒரு கேட்ச் மிஸ் செய்தது தான் முக்கியமான காரணம் ; கடுப்பில் இருக்கும் ரோஹித் ; பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ;

நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. தொடர்ந்து பவுண்டரிகளை விளாசி கொண்டு வந்தனர் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல். ஆனால், பவர் ப்ளேவிற்கு பிறகு இருவரும் ஆட்டம் இழந்தனர். அதனால் தொடர்ந்து விக்கெட்டை ஒருவர் பின் ஒருவராக இழந்து கொண்டு வந்தனர்.

இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 181 ரன்களை அடித்துள்ளது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 28, ரோஹித் சர்மா 28, விராட்கோலி 60, சூரியகுமார் யாதவ் 13, ரிஷாப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.

தொடக்கத்தில் சோர்வாக விளையாடிய பாகிஸ்தான் அணி மிடில் ஓவரில் அதிரடியாக விளையாட தொடங்கினர். இறுதி ஓவர் வரை விளையாடிய பாகிஸ்தான் அணி சரியாக 1 பந்து மீதமுள்ள நிலையில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 182 ரன்களை அடித்தனர். அதனால் 5 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.

அதில் ரிஸ்வான் 71, பாபர் அசாம் 14, ஜமான் 15, நவாஸ் 42, ஆசிப் அலி 16 ரன்களை அடித்துள்ளனர். இதில் இந்திய அணி சுலபமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியில் ஒரு கேட்ச்-ஐ மிஸ் செய்த காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆமாம், சரியாக 17வது ஓவரில் ரவி பிஷானி வீசிய பந்தை எதிர்கொண்டார் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி. அப்பொழுது அர்ஷதீப் சிங்-ன் கைக்கு சென்ற பந்தை சுலபமாக பிடித்திருக்க முடியும். ஆனால் கவன குறைவால் அதனை மிஸ் செய்தார். அப்பொழுது ஆசிப் அலி விக்கெட்டை கைப்பற்றிருந்தால் நிச்சியமாக பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கும்.

விக்கெட்டை தவறவிட்ட பிறகு ஆசிப் அலி 8 பந்தில் 16 ரன்களை விளாசினார். கேட்ச் பிடித்திருந்தால் 1 ரன்களில் ஆட்டம் இழந்திருப்பார் ஆசிப் அலி. இந்த தவறு தான் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்திய அணியின் பவுலர்களான புவனேஸ்வர் குமார் , ஹர்டிக் பாண்டிய, யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர்கள் ஓவருக்கு 10 ரன்களை கொடுத்துவிட்டனர். இதுவும் தோல்விக்கு முக்கியமான காரணம் தான் என்பதில் சந்தேகமில்லை..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img