யார் இடத்துல ! யார் சீன் போடுறது ? இன்னைக்கு இருக்கு தரமான சம்பவம் ; மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தீவிரமான பயிற்சி :

0

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. இன்று இரவு 7மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு 2024ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையை மனதில் வைத்து விளையாடி வருகிறது இந்திய. ஆமாம், இனிவரும் டி-20 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக ஹர்டிக் பாண்டியவும், அணியில் பல இளம் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடியாக விளையாடி வரும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் :

32வயதான சூரியகுமார் யாதவ் கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். தொடக்கத்தில் சற்று சோர்வாக விளையாடினாலும், இப்பொழுது 360 டிகிரி மன்னன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இதுவரை 42 டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 1408 ரன்களை அடித்துள்ளார். அதில் 12 அரைசதமும், 2 சதம் அடங்கும். சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஆனால் இப்பொழுது சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு ஒன்றே போதுமான ஒன்றாக இருக்கிறது.

தொடக்க வேறறகள் சொதப்பினால் கூட இந்திய அணிக்கு அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து கொடுக்க கூடிய அளவிற்கு திறமையான வீரராக திகழ்கிறார் சூர்யகுமார் யாதவ். இன்று இரவு நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் விளையாட போகும் சூர்யகுமார் யாதவ் இப்பொழுது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகிறார். அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் சூர்யகுமார் யாதவ் இல்லையென்றால் ? மிடில் ஆர்டர் வீக்னஸ் ஆக மாறிவிடுமா ? அவருக்கு பதிலாக சிறந்த மாற்று வீரர் யாராக இருக்க முடியும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here