இந்திய அணியின் தொடக்க வீரருக்கு காயம் ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் அப்போ ? Semi-Final வெல்ல வாய்ப்பு இருக்க ?
அரையிறுதி தகுதி பெற்ற இந்திய :
கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது ஐசிசி டி-20 லீக்போட்டிகள். சூப்பர் 12 போட்டிகளில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இப்பொழுது அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அரையிறுதி சுற்றுக்கு நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்திய, பாகிஸ்தான் போன்ற அணிகள் தகுதி பெற்றுள்ளனர்.
நாளை நடைபெற உள்ள போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர். இதில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெரும்.
இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியை வெல்லுமா இந்திய ?
சந்தேகம் தான். எப்பொழுது மற்ற அணிகளுக்கு இடையேயான தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் சொதப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.
அதுமட்டுமின்றி, ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற ஆசிய கோப்பை பேட்டியிலும் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் மோசமாக விளையாடியதால் வெளியேறியது இந்திய. அதே நிலைமை தான் இந்த வருடமும் நடக்க போகிறதா ? ஏனென்றால் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இப்பொழுது அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி, நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.
தொடக்க வீரருக்கு காயம் :
எப்படியாவது இந்த முறை ஐசிசி உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்று அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதேபோல தான் இந்திய வீரர்களும் பலமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். ஆனால் நேற்று பயிற்சி செய்து கொண்டு இருந்த போது இந்திய அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலை பயிற்சி மேற்கொண்டு இருந்த ரோஹித் சர்மாவின் வலது முழங்கையில் அடிபட்டுள்ளது. அதன்பின்னர் சுமார் 40 நிமிடங்கள் பயிற்சி மேற்கொள்ளவில்லை. அதனால் நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா ? இல்லையா ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
முன்பு போல இப்பொழுது ரோஹித் சர்மா சரியாக பேட்டிங் செய்வது இல்லை என்பது தான் உண்மை. இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022ல் ரோஹித் சர்மா இதுவரை விளையாடிய போட்டிகளில் 4,53,15,2,15 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ஒருவேளை ரோஹித் சர்மா இங்கிலாந்து அணி எதிரான போட்டியில் இடம்பெறவில்லை என்றால் இந்திய அணியால் சமாளிக்க முடியுமா இல்லையா ?