இந்திய வீரரான இவர் தான் உலகக்கோப்பை போட்டியில் மிரட்டல் அடி கொடுக்க போகிறார் ; அன்ட்ரூ மெக்டொனால்டு பேட்டி ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக எந்த பஞ்சமும் இருக்காது.

இந்திய அணியின் அறிவிப்பு:

கடந்த சில தினங்களுக்கு முன்பு டி-20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட இந்திய அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா, விராட்கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட், ஹர்டிக் பாண்டிய, தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி காத்திருப்பு பட்டியலில் முகமத் ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷானி, தீபக் சஹார் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் யார் யார் ப்ளேயிங் 11ல் இடம்பெற போகிறார்கள் என்ற குழப்பம் பெரிய அளவில் எழுந்துள்ளது தான் உண்மை.

வலுவான மிடில் ஆர்டர்:

ஆசிய கோப்பை போட்டியில் இருந்து சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி-20 போட்டிகள் வரை இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் வலுவான ஒன்றாக மாறியுள்ளது தான் உண்மை. ஏனென்றால், விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவின் பார்ட்னெர்ஷிப் இந்திய அணியிக்கு பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.

அதிலும் (360) சூர்யகுமார் யாதவ் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சுழற்றி சுழற்றி அடிக்க கூடிய திறன் இருக்கிறது. அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பாசிட்டிவ் ஆக தான் பார்க்கப்படுகிறது. இதனை பற்றி பேசிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அன்ட்ரூ மெக்டொனால்டு கூறுகையில் ;

“சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான டி-20 போட்டியில் டெத் பவுலிங் சரியாக செய்தார்களா இல்லையா என்று செய்தார்கள் என்று தான் சொல்வேன். நான் நிச்சியமாக ஆஸ்திரேலியா வீரர்களுக்கு பாராட்டுகளை சொல்லியே ஆக வேண்டும்.”

“ஏனென்றால் சரியான பிளான்-ஐ சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதில் வெறித்தமாக இறுதி நேரங்களில் ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடியுள்ளார், அதுவும் சீரியஸ் முழுவதும். அதிலும் சூர்யகுமார் யாதவின் ஆட்டம் தனித்துவமானது.”

“எனக்கு தெரிந்து டி-20 2022 உலகக்கோப்பை போட்டியில் மிகவும் ஆபத்தான வீரராக விளையாட போகிறார் என்று கூறியுள்ளார் அன்ட்ரூ மெக்டொனால்டு.” சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருக்குமா ? இல்லையா ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here