HomeTrending Newsவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது...

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ ; அணியின் விவரம் உள்ளே ;

சமீபத்தில் தான் தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தொடரை கைப்பற்றவில்லை.

அதனை தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி 6ஆம் தொடங்க உள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 லீக் போட்டிகள். ஆமாம்…! இந்த முறை மூன்று ஒருநாள் போட்டிகள் அகமதாபாத் மைதானத்திலும், மூன்று டி-20 போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

நேற்று தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. அதில் ரோஹித் சர்மா தான் வழிநடத்த உள்ளார். ஆமாம்…! அதனை உறுதி செய்துள்ளது பிசிசிஐ. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான அணியை அறிவித்த பிறகு கையில் பலமாக அடிபட்ட காரணத்தால் அவரால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த முறை ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்த உள்ளார். இந்திய அணியின் விவரம் : கே.எல்.ராகுல், கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தீபக் சஹார், ஷர்டுல் தாகூர், யுஸ்வேந்திர சஹால்,குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷோனி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா மற்றும் அவேஷ் கான்.

இந்த முறை தீபக் ஹூடா, ரவி பிஷோனி, அவேஷ் கான் போன்ற வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை போட்டியில் விளையாட வைப்பார்களா ? ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா ??

அதுமட்டுமின்றி, இந்த முறை ரோஹித் சர்மா கேப்டனாகவும், கே.எல்.ராகுல் துணை கேப்டனாகவும் செயல் பட உள்ளனர். ஆமாம்…! மறுபடியும் துணை கேப்டன் பதவியில் கே.எல்.ராகுல் இடம்பெற்றது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சியமாக அதிர்ச்சியாக தான் இருக்கும்.

அதற்கு முக்கியமான காரணம் சமீபத்தில் நடந்த முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகளை ரோஹித் சர்மா இல்லாத காரணத்தால் கே.எல்.ராகுலை நியமனம் செய்தனர். ஆனால் அதில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி மோசமான தோல்விகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img