HomeTrending Newsகாமன்வெல்த் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு செல்ல இந்த வீராங்கனை தான் முக்கியமான...

காமன்வெல்த் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு செல்ல இந்த வீராங்கனை தான் முக்கியமான காரணம் ;

பெண்களுக்கான காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஜூலை 29ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியது. இதுவரை வெற்றிகரமாக 10 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த முறை இந்திய, ஆஸ்திரேலியா, பார்படோஸ் , பாக்கிஸ்தான், நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளனர்.

இதுவரை நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து போன்ற நான்கு அணிகளும் தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும் பி பிரிவில் இன்னும் இரு போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் நிச்சியமாக தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிக்கு வாய்ப்பு கிடையாது.

நேற்று நடந்த போட்டியில் இந்திய மற்றும் பார்படோஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பார்படோஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடினார்கள். தீப்தி சர்மா,ஷஃபாலி வர்மா , ரொட்ரிகோஸ் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன.

20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 162 ரன்களை விளாசினார்கள். அதில் ஸ்ம்ரிதி மந்தன 5, ஷஃபாலி வர்மா 43, ரொட்ரிகோஸ் 56, தீப்தி சர்மா 34 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 163 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பார்படோஸ் அணி.

ஆனால் ஒரு வீராங்கனை கூட சரியாக விளையாடாமல் தொடர்ந்து ஆட்டத்தை இழந்து கொண்டே வந்தனர். இருப்பினும் இறுதி ஓவர் வரை விளையாடிய பார்படோஸ் பெண்கள் அணி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 62 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. ஆமாம், இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு தான் காரணம்.

இதில் இந்திய அணி மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடிய இரு போட்டிகளில் வென்ற நிலையில் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இதில் இந்திய அணியை சேர்ந்த ரேணுகா சிங் தான் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்து வருகிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட், நேற்று பார்படோஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் ரேணுகா சிங்.

இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதேபோல அதிக ரன்களை அடித்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் இந்திய அணியின் வீராங்கனை ஷஃபாலி வர்மா, மூன்று போட்டிகளில் விளையாடிய நிலையில் 107 ரன்களை அடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img