இந்த 11 பேர் இந்திய அணியில் இருந்தால் நிச்சியமாக உலகக்கோப்பை 2023ல் கூட வெல்ல வாய்ப்பு இருக்கிறது….! ; தீப் தாஸ் குப்தா..!

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ் குப்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை பற்றி கூறியுள்ளார். வருகின்ற 2023ஆம் ஆண்டு ஒருநாள்உலககோப்பையில் இந்திய அணி வெல்ல அதிகம் வாய்ப்புள்ளதாக தீப் தாஸ் குப்தா கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி -20 போட்டியில் தவான் சரியான ஆட்டத்தை விளையாட வில்லை. அதனால் அவர்களை மாற்றாக இஷான் கிஷான் மற்றும் சூர்யா குமார் யாதவ் ஆகிய இருவர் உள்ளனர். அப்படி இல்லையென்றால் கே.எல்.ராகுல்,மயங்க் அகரவால் ஆகிய வீரர்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்று 10ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் வருகின்ற 2023ஆம் ஆண்டு உலககோப்பையில் இந்திய அணி நிச்சியமாக வெல்லும் என்று அதிரடியாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய வீரர்கள் அவர்களுக்கு தெரிந்த வகையில் விளையாட வேண்டும்.

சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் கோலியின் அதிரடியான ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் என்று பெயரை வாங்கியுள்ளனர். அதனால் இப்பொழுது இந்திய வீரர்களை வைத்து வரும் உலககோப்பையில் வெல்ல இந்திய கிரிக்கெட் அணிக்கு வாய்ப்பு இருக்கிறது.

வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் மே 30ஆம் தேதி முடிவடையும். அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் 2021 போட்டியை வைத்து வருகின்ற டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பெற அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஐபிஎல் வாய்ப்பை யார் யார் பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.