வீடியோ : நூலிழையில் உலகக்கோப்பை தவறவிட்டது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி..! இப்படி ஒரு நிலைமையா ? ;

0

மார்ச் 4ஆம் தேதி முதல் பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கான ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற தொடங்கியது. அதில் இந்திய அணியின் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருந்தது தான் உண்மை. அதிலும் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அணி முதல் நான்கு இடங்களில் ஒரு இடத்தை கைப்பற்றியது இந்திய.

இன்று 28வது போட்டியில் களமிறங்கியது மித்தலி ராஜ் தலைமையிலான இந்திய அணியும், லூஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்…!! இந்திய அணியின் சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது.

அதிலும் மந்தன மற்றும் சஹாலி வர்மா இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து 120 ரன்களை அடித்தனர். பின்னர் மித்தலி ராஜ் மற்றும் ஹர்மன்ப்ரீட் சிங் ஆகிய இருவரும் ரன்களை அடிக்க தொடங்கினார்கள். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த இந்திய அணி 274 ரன்களை அடித்தனர்.

பின்பு 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இறுதி அவரை போராடி 275 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது. அதில் அதிகபட்சமாக ஒல்வார்டட் 80, லாரா 49, மிக்நோன் 52 ரன்களை அடித்துள்ளனர்.

இதற்கிடையில், இறுதி ஓவரில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது தென்னாபிரிக்கா. அந்த இறுதி ஒவரில் பவுலிங் செய்தார் தீப்தி சர்மா, முதல் பந்தில் 1, இரண்டவது பந்தில் விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்.

மூன்று பந்தில் நான்கு ரன்கள் தேவை என்ற நிலை தென்னாபிரிக்கா அணிக்கு உருவானது. 49.5 பந்தை வீசிய தீப்தி சர்மா விக்கெட்டை எடுத்தார், அதனால் இந்திய பெண்கள் அணி மிகவும் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் தீடிரென்று அது NO-BALL என்று நடுவர் அறிவித்துவிட்டார்.

அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. பின்னர் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்ற காரணத்தால் உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து விலகியது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி.. !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here