Advertisement
HomeTrending Newsஅரைஇறுதிக்கு முன்னேறியது இந்திய ; பா..! செம பவுலிங் ; பார்படோஸ் பெண்கள் அணியை தொம்சம்...

அரைஇறுதிக்கு முன்னேறியது இந்திய ; பா..! செம பவுலிங் ; பார்படோஸ் பெண்கள் அணியை தொம்சம் செய்த இந்திய வீராங்கனைகள்

நேற்று நடந்த காமன்வெல்த் 2022 போட்டியில் மத்தியூ தலைமையிலான பார்படோஸ் அணியும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பார்படோஸ் அணியின் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ஸ்ம்ரிதி மந்தன எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. இருப்பினும் ஷஃபாலி வர்ம மற்றும் ரொட்ரிகோஸ் ஆகியோரின் சிறப்பான பார்ட்னெர்ஷிப் காரணத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த இந்திய அணி 162 ரன்களை அடித்தனர். அதில் ஸ்மிரிதி மந்தன 5, ஷஃபாலி வர்மா 43, ரொட்ரிகோஸ் 56, தீப்தி சர்மா 34 ரன்களையும் அடித்துள்ளனர். பின்பு 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பார்படோஸ் அணி.

அதில் ஒருவருக்கு கூட பேட்டிங் மற்றும் பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர். இறுதி ஓவர் வரை விளையாடிய பார்படோஸ் அணி 8 விக்கெட்டை இழந்த நிலையில் வெறும் 62 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக கயஷோனா நைட் 16, ஷக்கீரா செல்மன் 12 ரன்களை அடித்துள்ளனர். இந்த காமன்வெல்த் போட்டியில் இரு பிரிவுகள் உள்ளது. அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களில் இருக்கும் அணி தான் அரையிறுதிக்கு தகுதி பெரும். பிரிவு ஏ -ல் இருக்கும் நான்கு அணிகளும் அனைத்து போட்டிகளிலும் விளையாடிவிட்டனர்.

அதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பெண் கிரிக்கெட் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் பிரிவு “பி” ல் இன்னும் இரு போட்டிகள் நடைபெற உள்ளது. அதிலும் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் அரைஇறுதிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

சிறப்பாக பவுலிங் மற்றும் பேட்டிங் செய்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இந்த முறை காமன்வெல்த் போட்டிக்கான கோப்பையை கைப்பற்றுமா ?

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular