சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்திய அணி தான் கிரிக்கெட் போட்டிகளில் வலுவான அணி என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி, இந்த முறை இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என்று பலர் கூறி வந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான்.
ஏனென்றால் இந்த முறை இந்திய அணி லீக் போட்டிகளில் 5 போட்டியில் விளையாடி அதில் 2 தோல்வி, 3 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் 3வது இடத்தில் இருந்தது. அதனால் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் போய்விட்டது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை….!!!
இந்திய அணிக்கு பயம் வந்தது அங்கு தான் என்று அவரது கருத்தை பகிர்ந்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹாக். இந்திய அணியை பற்றி பேசிய அவர் ” எனக்கு தெரிஞ்சு முதல் போட்டியில் நடக்கும் முன்பே இந்திய அணிக்கு பயம் வந்துவிட்டது. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையேயான போட்டியில் டாஸ் போடும் போது பாபர் ஆசாம் விட, விராட்கோலி க்கு மிகப்பெரிய அளவில் மன அழுத்தம் இருந்தது.
அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு இன்னும் அதிக பயம் வந்துவிட்டது. அதுமட்டுமின்றி, இந்திய அணி இந்த மாதிரி விளையாடியதே கிடையாது. இந்திய அணி சிறந்த டி20 அணிதான் அதில் எந்த மாற்றமும் இல்லை, கடந்த 3 ஆண்டுகளில் இந்திய அணி மிகவும் வலுவான அணியாக இருந்துள்ளது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹாக் கூறியுள்ளார்.
உலககோப்பை போட்டிகள் நடந்து முடிந்த பிறகு விராட்கோலி இந்திய அணியின் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இப்பொழுது இந்திய அணியின் டி20 போட்டிக்கான கேப்டன் ரோஹித் சர்மா தான். ரோஹித் சர்மாவை தேர்வு செய்ததற்கு முக்கியமான காரணமே ஐபிஎல் போட்டி தான். ஏனென்றால் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து முறை தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்தி ஐந்து முறை கோப்பையை வெல்ல காரணமாக இருந்துள்ளார்.
அதனால் இந்திய அணியையும் அடுத்த கடத்திற்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்க படுகிறது…!!!