ஹாப்பி நியூஸ்..!! மீதமுள்ள IPL போட்டிகளை நடத்த ஒரு வாய்ப்பு, BCCI என்ன செய்ய போகுது…? முழு விவரம் இதோ..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்தது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக பாதுகாப்புகளை மீறி கொரோனா சில வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டி சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் திடிரென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீரர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அதில் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் பிசிசிஐ, அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு, சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தலா ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் உடனடியாக ஐபிஎல் போட்டியை நிறுத்த வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்தது.

அதன்படி நிறுத்திய பிசிசிஐ, அனைத்து வீரர்களையும் வீட்டுக்கு போகும்படி கூறியுள்ளது. அதனால் மீதமுள்ள போட்டிகளை கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமா இருப்பதால் மீதமுள்ள போட்டியை ஐக்கிய அரபு , இங்கிலாந்து நாட்டில் போட்டியை நடக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

சமீபத்தில் பிசிசிஐ அளித்த பேட்டியில் , டி-20 உலககோப்பைக்கு முன்பு போட்டியை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துதாக தகவல் வெளியானது. மீதமுள்ள ஐபிஎல்2021 போட்டிகள் நடைபெறவில்லை என்ற சுமார் 2500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும், அதனால் கூடிய விரைவில் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது பிசிசிஐ.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகளை எங்கள் நாட்டில் நடத்தி கொள்ளுங்கள் என்று ஐக்கிய அரபு , இங்கிலாந்து கூறி வந்த நிலையில், இப்பொழுது இலங்கை நாடும் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி எங்கள் நாட்டில் லங்கா பிரீமியம் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்பின்னர் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி கொள்ளுங்கள், அதற்கான எல்லா வசதிகளையும் நாங்க செய்து தருகிறோம் என்று கூறியுள்ளார் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்.

இன்னும் மூன்று மாதங்களுக்கு ஐபிஎல் போட்டியை நடத்த முடியாது, ஏனென்றால் ஜூன் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் சீரியஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் நிச்சியமாக நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.