HomeTrending Newsஐபிஎல் போட்டிகளில் பட்டைய கிளப்பிய இளம் வீரர் தான் இனிமேல் ஒருநாள் போட்டிக்கான ஓப்பனிங் பேட்ஸ்மேன்...

ஐபிஎல் போட்டிகளில் பட்டைய கிளப்பிய இளம் வீரர் தான் இனிமேல் ஒருநாள் போட்டிக்கான ஓப்பனிங் பேட்ஸ்மேன் ;

இந்திய கிரிக்கெட் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, சமீபத்தில் தான் இங்கிலாந்து அணியை வீழ்த்திய சந்தோஷத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள போகின்றனர்.

இந்திய அணியின் விவரம் இதோ ;

ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுமன் கில், சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷர்டுல் தாகூர், யுஸ்வேந்திர சஹால், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, முகமத் சிராஜ் மற்றும் அர்ஷதீப் சிங்.

இருப்பினும் முன்னணி வீரர்களான விராட்கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி போன்ற வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. இதில் யார் யார் தொடக்க வீரராக களமிறங்க போவார்கள் என்று பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. ஆமாம், ஏனென்றால் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் தான் ஒருநாள் போட்டிக்கான தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

இதில் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக யார் தொடக்க நாயகன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷான் பெயர் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்துள்ளார்.

இதையும் படியுங்க ; ரோஹித்-க்கு பிறகு இவர் தான் இந்திய அணியின் கேப்டன் ; மாற்றமே இல்லை ; முன்னாள் வீரர் அருண் லால் பேட்டி ; யார் தெரியுமா ?

ஒருநாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார் ருதுராஜ் கெய்க் வாட், அந்த நேரத்தில் ருதுராஜ் கெய்க்வாட் -க்கு ப்ளேயிங் 11 ல் வாய்ப்பு கிடைக்காமல் திணறிக்கொண்டு வந்தார். ஆனால் இந்த ஆண்டு வாய்ப்புகள் கொடுத்த நிலையில் அதனை ருதுராஜ் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

அதிரடியாக விளையாடும் இஷான் கிஷான் டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாட சரியான வீரர் என்பதில் மாற்றுக்கருதில்லை. அதனால் ஜூலை 22ஆம் தேதி நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் தான் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட் கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றால் சிறப்பாக விளையாடுவாராருதுராஜ் கெய்க்வாட் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img