இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதில் இந்திய அணி தோல்வியை தான் சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான் ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சு அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆமாம்… ! ஐபிஎல் 2022 போட்டியில் புதிதாக இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அது லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகள் தான்.
அதனால் ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் மிகப்பெரிய அளவில் நடந்த போவதாக பிசிசிஐ. அது வருகின்ற பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். அதனால் தான் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதன்படி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வீரர்களை தக்கவைத்துள்ளனர்.
பின்னர் புதிய அணிகளை ஒரு வெளிநாட்டு வீரர் மற்றும் இரு இந்திய வீரர் என்ற அடிப்படையில் அணியில் கைப்பற்றிக்கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறிய படி இரு அணிகளும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதை விட கிரிக்கெட் ரசிகர்களுக்கு எழுந்த ஒரு சந்தேகம் ஐபிஎல் 2022 போட்டி எங்கு நடைபெறும் என்று….!!
ஆமாம்… ஏனென்றால் ஐபிஎல் 2020 மற்றும் 2021 இரு ஆண்டுகளும் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் ஐக்கிய அரபு நாட்டில் நடத்தினார்கள் . இப்பொழுது இந்தியாவில் மூன்றாவது கொரோனா அலை அதிகமாக பரவ தொடங்கியது. அதனால் ஐபிஎல் 2022 போட்டிகள் நிச்சியமாக ஐக்கிய அரபு தான் என்று நினைத்து கொண்டு வந்தனர்.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சற்றுமுன் தான் ஐபிஎல் 2022 போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் மும்பையில் உள்ள வான்கடே, கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மற்றும் பட்டேல் ஆகிய மூன்று மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. ஒருவேளை ஏதாவது பற்ற குறை ஏற்பட்டால் புனேவில் இருக்கும் மைதானத்தை பயன்படுத்த போவதாக பிசிசிஐ கூறியுள்ளனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் 2022 ஏலத்தில் மொத்தமாக 1214 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க போவதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதில் 896 இந்திய வீரர்களும், 318 வெளிநாட்டு வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனால் யார் யார் எந்த அணியில் இடம்பெற போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இந்த முறை மும்பையில் இருக்கும் மைதானத்தை மட்டுமே பயன்படுத்த உள்ளனர். உங்கள் கருத்துக்களை என்ன என்பதை மறக்காமல் Comments பண்ணுங்க.. !!