IPL..போட்டி நிறுதிவிட்டால் , என்னை போன்றவர்களின்… நிலைமை தெரியுமா உங்களுக்கு ? ; வேதனையுடன் பேசியுள்ளார் இளம் வீரர்…!! முழு விவரம் இதோ..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30வரை போட்டிகள் நடக்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக 29 போட்டிகள் நடந்த பிறகு சில வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் உடனடியாக ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைத்துள்ளார் பிசிசிஐ. மீதமுள்ள போட்டிகள் செப்டெம்பர் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

கடந்த மே4 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய போட்டிக்கு முன்பு சில கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சில வீரர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் காரோண தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அந்த போட்டியை மட்டும் முதலில் ரத்து செய்தது பிசிசிஐ. சில சந்தேகத்தின் அடிப்படையில் அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஒருவருக்கும், சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியில் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக ஐபிஎல் 2021 போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ.

அதன்பின்னர் அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்துன்னர். மீதமுள்ள போட்டியை செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளை றது செய்ய வேண்டும் !! ஐபிஎல் போட்டிகள் எதற்கு நடக்க வேண்டும் !! என்று பல கேள்விகள் எழுந்தனர்.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான சேட்டன் சக்கரியா ஐபிஎல் 2021யில் அறிமுகம் ஆகியவர். அவர் விளையாடிய 7 போட்டிகளில் 7 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

சில திங்கங்களுக்கு முன்பு அவரது அப்பாவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிறப்பாக சிகிச்சை அளித்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக இன்று அவர் உயிர் இழந்துள்ளார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இரு தினங்களுக்கு முன்பு, அவர் கொடுத்த பேட்டியில்; ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி விட வேண்டும் என்று பல எதிர்ப்புகள் வந்தது. ஆனால் என்னை போன்ற வீரர்களுக்கு இந்த ஐபிஎல் போட்டி ஒன்று மட்டும் தான் வருமானம். எங்கள் வீட்டில் நான் மட்டும் தான் சம்பாரிக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் சேட்டன் சக்கரியா.

ஒரு போட்டியை நிறுத்த வேண்டும் என்று பல எதிர்ப்புகள் செய்வது மிகவும் சுலபமான ஒன்று. ஆனால் அதுக்கு பின்னால் பல சேட்டன் சக்கரியா இருக்கிறார் என்பதை நாம் எப்பொழுதும் மறந்துவிடகூடாது.