Dhoni பயிற்சியாளரா ??? பிசிசிஐ- யின் முடிவா… !!! சந்தோஷத்தில் ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வருகின்ற உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஓய்வு பெற போவதாக அவரே தகவல் வெளியிட்டுள்ளார். இவர் அதனால் அடுத்த பயிற்சியாளர் யார் என்று கேள்விகள் எழுகின்றன. அதில் சிலர் அவரவர் கருத்துகளை கூறி வருகின்றனர். அதில் லட்சுமன் மற்றும் அனில் கும்ளே ஆகிய இருவரில் ஒரிவர் பயிற்சியாளராக வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளரான எம்.எஸ்.கே. பிரசாத் அளித்த பேட்டியில்; ரவி சாஸ்திரிக்கு பிறகு தோனி ஆலோசகராகவும் மற்றும் ராகுல் டிராவிட் பயற்சியாளராக இருக்க வேண்டும். இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக இருந்தால் இந்திய அணியை தொடவே முடியாது.

ஏனென்றால் ராகுல் மற்றும் தோனி ஆகிய இருவரும் எப்பொழுதும் அமைதியாகவும், சக வீரர்களை பற்றி நன்கு புரிந்து கொண்டு வழிநடத்த கூடிய அனைத்து திறனும் இவர்கள் இருவருக்கும் உண்டு என்று கூறியுள்ளார் பிரசாத். சமீபத்தில் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.

அதில் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஆலோசகராக நியமனம் செய்துள்ளனர். தோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச போட்டியில் இருந்து விலகினார். இதுவரை தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி கோப்பைகளை அனைத்தும் பொறுப்பேற்று வங்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி இப்பொழுது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2008ஆம் முதல் இப்பொழுது வரை அவர் தான். ஆனால் தோனி முன்பு போல் பேட்டிங் செய்வதில்லை. அதனால் அவரே அணியில் இருந்து வெளியேறிவிடுவாரா ?? ஏனென்றால் சிஎஸ்கே அணியின் போட்டிகளை பார்ப்பதற்கு முக்கியமான காரணம் தோனி தான். அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது.

அதனால் தோனியே ஓய்வை அறிவித்துவிடுவாரா?? என்ற குழப்பம் எழுந்துள்ளது.