இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்து சிறப்பான முறையில் நடந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக திடிரென்று வீரர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது அதனால் ஒரு போட்டி மட்டும் தடை செய்தது பிசிசிஐ. இருந்தாலும் சில சந்தேகம் அடிப்படையில் அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்தது.
அப்படி செய்யும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கும், சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியில் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் வேறு வழி இல்லாமல், ஐபிஎல் போட்டியில் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. அதனால் ஐபிஎல் போட்டியின் தீவிரமான ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி தான்.
இப்பொழுது, ஐபிஎல் டி-20 போட்டிகள் நிறுத்தி விட்டதால் எல்லா வீரர்களும் அவரவர் வீட்டுக்கு திரும்பி போகின்றனர். ஆனால் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்தியாவில் இருந்த வர அனுமதி இல்லை என்று சில நாடுகள் அறிவுறுத்தி உள்ளது. அதில் ஆஸ்திரேலியா நாடும் ஒன்று. யாராவது இந்தியாவில் இருந்து தெரியாமல் ஆஸ்திரேலியா வந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
அதனால் கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஐபிஎல் போட்டிக்காக இந்திய வந்தனர். அவர்கள் இப்பொழுது மீண்டும் ஆஸ்திரேலியா போக முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர். பிசிசிஐ முடிவால், ஆஸ்திரேலியா வீரர்களை இலங்கை அல்லது வேறு ஏதாவது நாடு அனுப்பி.. அவர்களை தனிமைப்படுத்தி அதன்பிறகு ஆஸ்திரேலியா அனுப்பலாம் என்று முடிவு வந்துள்ளது பிசிசிஐ.
ஆனால் அதிலும் சில சிக்கல் இருப்பதால் என்ன செய்யப்போகிறது பிசிசிஐ என்று தெரியவில்லை… சொந்த மக்களை அவர்களது நாட்டுக்கு அழைக்க மறுக்கும் ஆஸ்திரேலியா, இது மிகவும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் பேட் கம்மின்ஸ். அதுமட்டுமின்றி பேட் கம்மின்ஸ் சில நாட்களுக்கு முன்பு இந்திய மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் 50,000$ பிரதமர் நிதியுதவிக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.