ரோஹித் சர்மா-க்கு கூட பவுலிங் வீசலாம் ஆனால் இவருக்கு பவுலிங் செய்வது மிகவும் கடினம் ; பாக்கிஸ்தான் வீரர் சொன்ன இந்திய வீரர் யார் ..!

பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகம்மது அமீர், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் பவுலராக விளையாடியுள்ளார். அதில் 36 டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்டையும், 61 ஒருநாள் போட்டியில் 81 விக்கெட்டையும், 50 டி-20 போட்டிகளில் 59 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு 2020ல் சர்வேதச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதுமட்டுமின்றி, கூடிய விரைவில் பிரிட்டிஷ் நாட்டில் குடியுரிமை பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் நிச்சியமாக அவருக்கு இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் ; ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பவுலிங் செய்து மிகவும் கடினம். நான் இதுவரை பவுலிங் செய்ததில் அவருக்கு தான் கடினமாக இருந்தது. ஏனென்றால் எப்படி பந்து வீசுவது என்றே தெரியாது ஒரே குழப்பமாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார் முகம்மது அமீர்.

கடந்த 2017ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பை போட்டியில் முகமது அமீர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முதல் மூன்று விக்கெட்டை கைப்பற்றினார். அதாவது ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் போன்ற வீரர்களின் விக்கெட்டை எடுத்தார் பாகிஸ்தான் அணியின் பவுலர் அமீர்.

அந்த நேரத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்தை நான் மிகவும் ரசித்தேன். அதிலும் விராட் கோலி பற்றி நம் ஒன்றுமே சொல்ல முடியாது. பல மோசமான நிலையில் இருந்த போட்டிகளை வெற்றிக்கு கொண்டு சென்றுள்ளார் விராட் கோலி. அதனால் அவர் கிங் கோலி என்று தான் சொல்லுவேன்.

இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆன ரோஹித் ஷர்மாவுக்கு கூட பந்து வீசுவது சுலபம். ஏனென்றால் அவர் எப்படி பேட்டிங் செய்கிறார் என்பதை சுலபாக கணிக்க முடியும். ஆனால் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கு அதனை கணிக்கவே முடியாது என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகம்மது அமீர்.