3 ஆண்டுகள் கழித்து என்னுடைய வெறியை தோனியை வைத்து முடித்துவிட்டேன்…! ; அவேஷ் கான் அதிரடி பேட்டி…!

3 ஆண்டுகள் கழித்து என்னுடைய வெறியை தோனியை வைத்து முடித்துவிட்டேன்…! ; அவேஷ் கான் அதிரடி பேட்டி…!

இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஐபிஎல் 2021 சிறப்பான முறை நடைபெற்று வருகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டும் ஐபிஎல் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30வரை நடைபெற உள்ளதாக பிசிசிஐ அட்டவணையை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் 2021 போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை எடுத்தனர். அதிலும் ஒபெநிங் பேட்ஸ்மேனான டுப்ளஸிஸ் மற்றும் ரருதுராஜ் சரியான தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இருந்தாலும் பின்னர் பேட்டிங் செய்த சுரேஷ் ரெய்னா, மெயின் அலி, ஜடேஜா , ராயுடு, ஜடேஜா, சாம் கரண் போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு 188 ரன்களை சேர்த்துள்ளனர். பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

18.4 ஓவரில் 190 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. அதனால் புள்ளிபட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி இடத்தில உள்ளது.

3 ஆண்டுகள் கழித்து என்னுடைய வெறியை தோனியை வைத்து முடித்துவிட்டேன்…! ; அவேஷ் கான் அதிரடி பேட்டி…!

இந்த போட்டியில் தோனி பேட்டிங் செய்த இரண்டாவது பந்தில் அவுட் ஆனார். அந்த ஓவர் பந்து வீசியது அவேஷ் கான், எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது தோனி பாய் விக்கெட்டை கைப்பற்றியது.

எனக்கு இந்த வாய்ப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை கிடைத்தது, ஆனால் அதனை யாரோ கேட்ச் பிடிக்க தவறவிட்டார். அதனால் இப்போ அவுட் செய்தது எனக்கு மிகவும் சந்தோசமாக தான் இருக்கிறது.

ஏனென்றால் நான் 4 ஓவர் பந்து வீசி 23 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றியுள்ளேன். அதனால் டெல்லி கேபிட்டல்ஸ் ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 188 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது. ஒருவேளை நான் டுப்ளஸிஸ் விக்கெட் இரண்டாவது ஒவேரில் எடுக்காமல் இருந்திருந்தால் அவ்ளோதான்.

அவர் ஒரு அருமையான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை, விக்கெட் போகாமல் இருந்தால் அதிரடியாக விளையாடி இருப்பர். அதுமட்டுமின்றி முதல் சில ஓவர் விக்கெட்டை கைப்பற்றியது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு நல்ல ஒரு நிலையாக மாறியது, என்று கூறியுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர் அவேஷ் கான் கூறியுள்ளார்.