HomeTrending Newsஇந்திய அணியில் இவருக்கு மட்டும் மாற்று வீரர் யாருமே இல்லை ; இவர் இல்லையென்றால் இந்தியாவுக்கு...

இந்திய அணியில் இவருக்கு மட்டும் மாற்று வீரர் யாருமே இல்லை ; இவர் இல்லையென்றால் இந்தியாவுக்கு சிரமம் தான் ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை 2022 வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் 6 அணிகளின் விவரம் :

மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். அதில் இந்திய, இலங்கை , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற ஐந்தும் அணிகள் உறுதியாகியுள்ளது. அதிலும் 6வது இடத்திற்கு ஹாங் காங், சிங்கப்பூர், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட போகின்றது.

சமீபத்தில் தான் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா, அவேஷ் கான், அர்சத்தீப் சிங், புவனேஸ்வர் குமார், ரவி பிஷானி, யுஸ்வேந்திர சஹால், ஹர்டிக் பாண்டிய, விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த முறை இந்திய கிரிக்கெட் அணி வலுவாக இருப்பதால் ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்திய வீரரின் அசத்தலான கம்பேக் :

கடந்த ஆண்டு முழுவதும் மோசமாக விளையாடி கொண்டு வந்தார் இந்திய அணியின் ஆல் – ரவுண்டரான ஹர்டிக் பாண்டிய. ஆமாம் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொளப்பட்டதில் இருந்து சரியாக பவுலிங் செய்ய முடியாமல் பேட்ஸ்மேனாக விளையாடி கொண்டு வந்தார்.

அதிலும் பெரிய அளவில் விளையாடாத காரணத்தால் இந்திய அணியில் அவரை வெளியேற்ற வேண்டுமென்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கம்பேக் கொடுத்தார்.

பின்னர் இந்திய அணியில் இடம்பெற்று இதுவரை சிறப்பாக விளையாடி வருகிறார் ஹர்டிக் பாண்டிய. கடந்த ஆண்டு உலகக்கோப்பை 2021ல் அவரது ஆட்டம் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் இந்திய அணியால் சரியாக விளையாட முடியாமல் போனது. ஆனால் இந்த வருடம் நிச்சியமாக ஹர்டிக் பாண்டியாவின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ; “விராட்கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அணியில் வைத்து விளையாட முடியும். ஆனால் ஹர்டிக் பாண்டிய பாண்டிய மட்டும் இந்த உலகக்கோப்பை டி-20 போட்டியில் இடம்பெறவில்லை என்றால் நிச்சியமாக இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கல் தான். அவருக்கு (ஹர்டிக் பாண்டிய) மாற்றாக வேறு எந்த வீரரையும் தேர்வு செய்ய முடியாது என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img