வீடியோ : இப்படி ஒரு கேட்ச் ஐ பார்த்திருக்கவே முடியாது; சூப்பர்மேன் போல, பறந்து பிடித்த கேட்ச் பிடித்தார் ஜடேஜா …..!

0

நேற்று அபுதாபி-யில் நடைபெற்ற 33வது போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

அதற்கு முக்கியமான காரணம், கடந்த இரு போட்டிகளிலும் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் குறைவான ரன்களை அடித்து தோல்வியை பெற்றுள்ளது. அதனை நினைவில் கொண்டு பவுலிங் செய்ய முடிவு செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு மிஞ்சியது தோல்வியே.

ஏனென்றால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதிலும் குறிப்பாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி 130+ ரன்களை அடித்துள்ளனர்.

இருவரும் ஆட்டம் இழந்தாலும், ஹார்டிக் பாண்டிய மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் அதேபோல, அதிரடியாக விளையாடி உள்ளனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 210 ரன்களை அடித்துள்ளனர். அதில் கே.எல்.ராகுல் 69, ரோஹித் சர்மா 74, ரிஷாப் பண்ட் 27 மற்றும் ஹார்டிக் பாண்டிய 35 ரன்களை அடித்துள்ளார்.

பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால் காத்திருந்தது தோல்வியே. ஏனென்றால் தொடக்கத்தில் இருந்து பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தோல்வியை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.

20 ஓவர் வரை போராடி 7 விக்கெட்டை இழந்து 144 ரன்களை மட்டுமே கைப்பற்றியுள்ளனர். அதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் புள்ளிபட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்திய…..!

வீடியோ :

இதற்கிடையில், இந்திய அணியில் பவுலிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில், 18வது ஓவர் பந்து வீசினார் முகமது ஷமி, அதனை எதிர்கொண்டார் ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜனட், அப்பொழுது அவர் அடித்த பந்து மிகவும் உயரமாக சென்றது. இருந்தாலும் அதனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று நினைத்து ஜடேஜா அதை தாவிப்பிடித்தார்.

ஆனால் டிவி நடுவர் அதனை பார்த்த பொழுது அவர் பிடித்த பந்தை உடனடியாக தரையில் படுவதை கவனித்தனர். நாட் அவுட் கொடுத்த காரணத்தால், விக்கெட்டை மீண்டும் திரும்ப பெற்றது ஆப்கானிஸ்தான் அணி. நாட் அவுட் ஆகவே இருந்தாலும் அதில் ஒரு பயனும் இல்லாமல் போனது ஆப்கானிஸ்தான் அணிக்கு…..!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here