இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் ஐபிஎல் வீரர்கள் அனைவரும் அவரவர் அணியில் இணைந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்த ஆண்டு நடக்கப்போகும் முதல் சில ஐபிஎல் போட்டிகளில் மக்கள் யாரும் அனுமதி இல்லை என்றும் அவரவர் ஹாம் மைதானத்தில் எந்த அணியும் விளையாட முடியாது என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஆண்டும் ஏமாற்றம் தான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரர்களுள் ஒருவர் தான் ரவீந்திர ஜடேஜா. சிஎஸ்கே அணிக்கு மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணிக்கும் முக்கியமான ஆல் – ரவுண்டர் என்றே சொல்லலாம். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய கிரிக்கெட் அணி.
அதில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் போது எதிர்பாராத விதமாக அவரது கையில் அடிபட்டுவிட்டது. அதனால் அவரால் மீதமுள்ள போட்டிகளில் கலந்து கொள்ள முடியமால் போய்விட்டது. குறைந்தது 2 மாதம் ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர் கூறியதால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் விளையாட முடியாமல் போய்விட்டது.
அதனால் ஐபிஎல் போட்டியிலும் இருக்காமாட்டாரோ?? என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் இருக்கின்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஜடேஜா. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது. அதனால் நிச்சியமாக நல்ல ஒரு போட்டியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மிகவும் மோசமான ஆட்டத்தை விளையாடி உள்ளார்கள் அதனால் ஐபிஎல் வரலாற்றில் அதுவே முதல் முறை ப்-ளே ஆஃப் சுற்றுக்குள் போகாமல் வெளியேறியது.
அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு நிச்சியமாக சிஎஸ்கே அணி நல்ல ஒரு காம்பேக் தரும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர். என்ன நாடாகும் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
ஐபிஎல் 2020:
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, 11 போட்டிகளில் பேட்டிங் செய்து 232 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிபட்சமாக 50 ரன்களை அடித்துள்ளார். பவுலிங் செய்யும்போது, 13 போட்டிகளில் பவுலிங் செய்த ரவீந்திர ஜடேஜா 6 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.