Umpire-க்கு கூட அது விக்கெட் அல்லது இல்லையா என்று தெரியவில்லை, குழப்பத்தில் அவுட் சிக்னல் கொடுத்தார்.. ஆனால் ஜடேஜா எடுத்த முடிவு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
நேற்று டெல்லியில் உள்ளது அருண் ஜெட்லி மைதானத்தில் 27வது ஐபிஎல் 2021 போட்டியில் மகேந்திர சிங் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதுவரை இரு அணிகளும் 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 போட்டியிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டியிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 218 ரன்களை விளாசியுள்ளனர். ருதுராஜ் மற்றும் சுரேஷ் ரெய்னாவை தவிற பேட்டிங் செய்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளனர்.
அதில் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்கள், டுப்ளஸிஸ் 50 ரன்கள், மொயின் அலி 58 ரன்கள்,சுரேஷ் ரெய்னா 2 ரன்கள், அம்பதி ராயுடு 72 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 22 ரன்களை விளாசியுள்ளார். பின்பு மும்பை இந்தியன்ஸ் அணி 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கியது.
இறுதி ஓவரின் இறுதி பந்து வரை போராடி மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆன டி-காக் 38 ரன்கள், ரோஹித் சர்மா 35 ரன்கள், சூரியகுமார் யாதவ் 3 ரன்களில் ஆட்டம் இழக்க.
அதன்பின்னர் பேட்டிங் செய்த குர்னல் பாண்டிய 32 ரன்கள் மற்றும் பொல்லார்ட் இறுதிவரை போராடி ஆட்டம் இழக்காமல் 34 பந்தில் 87 ரன்களை விளாசியுள்ளார். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியின் இடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்த போது, ஜடேஜா எடுத்த முடிவுக்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றன்னார். சிஎஸ்கே அணி பேட்டிங் செய்த போது 13வது பந்து வீசிய பொல்லார்ட், LBW விக்கெட் கேட்டு பொல்லார்ட் அம்பயரிடம் கத்தி கேட்டார்.
சில வினாடிகள் கழித்து ஜடேஜாவுக்கு அவுட் என்று கூறினார் அம்பயர். ஆனால் அது ஜடேஜாவுக்கு நன்கு தெரியும் விக்கெட் இல்லை என்று.அதனால் டிவி அம்பையரிடம் Review கேட்டார். அதன்பிறகு அது அவுட் இல்லை என்று கூறியுள்ளனர்.
அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. வீடியோ இதோ;