ஐபிஎல் 2021: வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி ஆண்டு மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். முதலில் ஏப்ரல் 10ஆம் தேதி தான் ஐபிஎல் 2021 தொடங்கியது.
ஆனால் சில வீரர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதியானதால், உடனடியாக அனைத்து வீரர்களையும் பரிசோதனை மேற்கொண்டு அவரவர் வீட்டுக்கு பாதுகாப்பாக வழி அனுப்பிவைத்துள்ளது பிசிசிஐ. மீதமுள்ள போட்டிகள் நடைபெறுமா ? இல்லையா ? என்று பல கேள்விகள் எழுந்தன.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் செப்டம்பர் 19ஆம் தேதி முடிவு செய்தது பிசிசிஐ. ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணிகளுள் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை நடந்து முடிந்த 13 சீசன் ஐபிஎல் போட்டிகளில் 12 முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தகுதிபெற்ற அணி என்றால் அது சிஎஸ்கே மட்டும் தான்
.
ஐபிஎல் அறிமுகம் ஆன 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை தோனி தான் அதனை சிறப்பான முறையில் வழிநடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தான் சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான ஆண்டாக மாறியது. ஏனென்றால் அதுதான் முதல் முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெறாமல் போனது.
மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். ஆனால் இன்னும் ஐபிஎல் போட்டியில் சில ஆண்டுகள் விளையாட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருந்தாலும் தோனிக்கு அடுத்தது யார் அணியை வழிநடத்துவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளனர்.
தோனி க்கு அடுத்தது சுரேஷ் ரெய்னா தான் அனுபவம் வாய்ந்த வீரர், ஆனால் தோனி ஓய்வு பெற்றால் நானும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிவிடுவேன் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா. சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் அடுத்த சிஎஸ்கே அணியின் கேப்டன் யார் என்று கேள்விகள் எழுந்தனர்.
அதனை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் – ரவுண்டர் ஜடேஜா 8 என்று கமெண்ட் செய்துள்ளார். அது அவருடைய சிஎஸ்கே அணியின் ஆடல் நம்பர். அதன்பிறகு தான் புரியவந்தது ஜடேஜா கேப்டனாக ஆசைப்படுகிறார் என்று
.
அதில் ஒன்றும் தவறு இல்லை, ஜடேஜா ஒரு மிகச்சிறந்த ஐபிஎல் வீரர் மட்டுமின்றி, நல்ல ஒரு ஆல் -ரவுண்டர். அதுமட்டுமின்றி, முதலில் நடந்து முடிந்த சில போட்டிகளில் பவுலிங் மாஸ் ஆக இருந்துள்ளது தான் உண்மை. ஏனென்றால் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஒவரில் 36 ரன்களை அடித்துள்ளார். அதில் ஐந்து (சிக்ஸர்) மற்றும் ஒரு (பவுண்டரி) ஆகும்.