சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவர இருக்குமோ..! இவருக்கு தான் அதிக வாய்ப்பிருக்கிறது..! யார் தெரியுமா ..?
நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய சிஎஸ்கே அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 191 ரன்களை அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக ஜடேஜா 62 ரன்கள், டுபளஸிஸ் 50 ரன்கள் , ருதுராஜ் கெய்கவாட் 33 ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இறுதிவரை போராடி 122 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியளில் 8 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.
தோனிக்கு இதுதான் இறுதி ஐபிஎல் போட்டி என்று சமுகவலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகிவந்தது. அதனால் அவருக்கு பிறகு யார் கேப்டன் என்ற கேள்வி பலர் எழுப்பப்பட்டது. அதன்படி பார்த்தால் இன்னும் இந்திய அணியில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா (ஆல்-ரவுண்டர்) தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த அதிகம் வாய்ப்பிருக்கும்.
தோனி ஐபிஎல் விட்டு விலகினால் , ரெய்னாவும் நிச்சயமாக ஐபிஎலில் இருந்து இருந்துவிலகிருவார். அதனால் ஜடேஜாவுக்கு தான் அதிகம் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் அதிரடியாக விளையாடி பல விக்கெட்டையும் பல ரன்களையும், பல கேட்ச் பிடித்துள்ளார். அதனால் அவருக்கு நிச்சியமாக அந்த தகுதியும், அந்த வாய்ப்பும் நிச்சியமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
இதுவரை நடந்த போட்டியில் ஜடேஜா 5 போட்டியில் விளையாடி 102 ரன்களை அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டம் இழக்காமல் 62 ரன்களை அடித்துள்ளார். பவுலிங்கில் ஜடேஜா இதுவரை 5 போட்டியில் 5 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ஜடேஜா. சில போட்டிகள் வெற்றிக்கு முக்கியமான காரணம் ஜடேஜா தான் என்பதில் சந்தேகமில்லை.